எக்ஸ்குளுசிவ் செய்தி

மயிலாடுதுறையில் சிக்கிய நபர்கள் பின்னணியில் பயங்கரவாத அமைப்பு: விசாரணையை துவக்கிய அதிகாரிகள்

Added : மே 17, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
மயிலாடுதுறையில் போலீசாரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய நபர்களுக்கு பின்னணியில், பயங்கரவாத அமைப்பு ஒன்று இருப்பது பற்றி, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.மயிலாடுதுறையில், மர்ம கும்பல் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள், கறுப்பு நிற 'ஸ்கார்பியோ' காரில் தப்பிச் செல்வதை போலீசார்
 மயிலாடுதுறையில் சிக்கிய நபர்கள் பின்னணியில் பயங்கரவாத அமைப்பு: விசாரணையை துவக்கிய அதிகாரிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


மயிலாடுதுறையில் போலீசாரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய நபர்களுக்கு பின்னணியில், பயங்கரவாத அமைப்பு ஒன்று இருப்பது பற்றி, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

மயிலாடுதுறையில், மர்ம கும்பல் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள், கறுப்பு நிற 'ஸ்கார்பியோ' காரில் தப்பிச் செல்வதை போலீசார் கண்டுபிடித்தனர். இந்த காரை, பிப்., 21 காலை 11:00 மணியளவில், மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே மடக்கினர்.

இதில், அதே மாவட்டம், நீடூரைச் சேர்ந்த சாதிக் பாஷா, 38, ஜஹபர் அலி, 58, கோவை முகமது ஆஷிக், 29, காரைக்கால் முகமது இர்பான், 22, சென்னை அயனாவரம் ரஹ்மத், 29, ஆகியோர் இருப்பது தெரிய வந்தது. இவர்களிடம் போலீசார் விசாரித்தபோது, சாதிக் பாஷா போலீசாரை துப்பாக்கியை காட்டி மிரட்டினார். பின், ஐவரும் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்கள் மற்றும் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இது குறித்து, தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ., அதிகாரிகள் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


எங்கிருந்து வருகிறது

சாதிக் பாஷா மற்றும் இவரது கூட்டாளிகள், 'காலிபா பார்ட்டி ஆப் இந்தியா, காலிபா பிரன்ட் ஆப் இந்தியா' உள்ளிட்ட அமைப்புகளை நடத்தி வந்துள்ளனர். இவர்கள், தமிழகத்தில் மிகப்பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டு இருந்தனர். இதன் பின்னணியில், தமிழகத்தில் செயல்படும் பயங்கரவாத அமைப்பு ஒன்று இருப்பதை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இது குறித்து, தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த அமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து, சமீபத்தில் டில்லி சென்ற தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தபோது தெரிவித்துள்ளார்.அதன் அடிப்படையில், இந்த அமைப்புக்கு பணம் எங்கிருந்து வருகிறது; அதன் பின்னணியில் உள்ள ஒட்டு மொத்த கும்பல் எது என்பது குறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் தகவல் திரட்டி உள்ளனர்.

புதுடில்லி சிறப்பு நிருபர்

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
18-மே-202207:52:58 IST Report Abuse
sankar இவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று திமுக சட்டம் இயற்றும்.
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
17-மே-202208:44:24 IST Report Abuse
a natanasabapathy இவர்களை விசாரணை இன்றி தூக்கில் போட வேண்டும் .சிறையில் வைத்து பிரியாணி போட்டு கொழுக்க வைக்க கூடாது
Rate this:
Cancel
Visu - chennai,இந்தியா
17-மே-202207:05:39 IST Report Abuse
Visu எண்கவுண்டர் பண்ணி சட்டு புட்டுந்னு முடிங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X