போலீஸ் டைரி

Added : மே 17, 2022 | |
Advertisement
கணவர் இறந்த துக்கம் மனைவி தற்கொலைசங்ககிரி: சங்ககிரி அருகே விபத்தில் கணவர் இறந்த சோகத்தில் இருந்த மனைவி இரண்டு மாதங்களுக்கு பின் தற்கொலை செய்து கொண்டார்.சங்ககிரி மாவெலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சனி, 22. இவருக்கும் ஈரோடு மாவட்டம், பவானியை சேர்ந்த மதன்குமாருக்கும், 2021 மார்ச் மாதம் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கடந்த பிப்ரவரியில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.



கணவர் இறந்த துக்கம் மனைவி தற்கொலை

சங்ககிரி: சங்ககிரி அருகே விபத்தில் கணவர் இறந்த சோகத்தில் இருந்த மனைவி இரண்டு மாதங்களுக்கு பின் தற்கொலை செய்து கொண்டார்.
சங்ககிரி மாவெலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சனி, 22. இவருக்கும் ஈரோடு மாவட்டம், பவானியை சேர்ந்த மதன்குமாருக்கும், 2021 மார்ச் மாதம் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கடந்த பிப்ரவரியில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், மதன்குமார், கடந்த மார்ச், 8ம் தேதி சாலை விபத்தில் இறந்தார். கணவன் இறந்ததால், இரண்டு மாதங்களாக சோகத்துடன், தன் குழந்தையுடன் தந்தை வீடான மாவெலிபாளையத்தில் ரஞ்சனி இருந்து வந்தார். நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது, பேனில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சங்ககிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

சேலம் ஏரிக்கரையில் முதியவர் மர்ம சாவு

சேலம்: சேலம், இரும்பாலை அருகே உள்ள வட்டமுத்தாம்பட்டியை சேர்ந்தவர் மாது,70; கூலித்தொழிலாளியான இவர் மது குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். நேற்று முன்தினம் மாலையில் அதே பகுதியில் உள்ள மகள் வீட்டுக்கு செல்வதாக கூறி விட்டு மழையில் நனைந்தபடி சைக்கிளில் சென்றார். நேற்று காலை வரை அவர் வீடு திரும்பவில்லை. அதே பகுதியில் உள்ள ஏரிக்கரையில் சைக்கிளின் அருகே பிணமாக கிடந்தார். இரும்பாலை போலீசார் விசாரிக்கின்றனர்.

பெண் தீக்குளிப்பு: போலீஸ் விசாரணை

நங்கவள்ளி: நங்கவள்ளி குட்டப்பட்டி ஏர்வாடி மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சரோஜா, 50. இவருடைய கணவர் அண்ணாமலை. 52. குழந்தை இல்லாத காரணத்தினால், கடந்த, 25 ஆண்டுகளாக சரோஜா அவரது தாய் வீட்டில் இருந்து வந்துள்ளார். சில மாதங்களாக சற்று மன நலம் பாதிக்கப்பட்டிருந்த சரோஜா, நேற்று மதியம் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நங்கவள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சகோதரர்களை கத்தியால் குத்திய 3 பேர் கைது

சேலம்: சேலம், சூரமங்கலம் அருகே உள்ள ஜாகீர் சின்னம்மாபாளையத்தை சேர்ந்த ராஜ்,29, அருண்குமார்,26. இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த சூர்யா,32, அருண்,26, ராஜமாணிக்கம்,24, மஞ்சுநாதன்,33, ஆகியோருக்குமிடையே ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு, ஜாகீர்சின்னம்மாபாளையம் அங்கன்வாடி மையம் அருகே ராஜிவும், அருண்
குமாரும் பேசிக் கொண்டிருந்தனர். அங்கு வந்த சூர்யா தலைமையிலான கும்பல் சகோதரர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டி உள்ளனர்.
இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த கும்பல், சகோதரர்கள் இருவரையும், பீர் பாட்டிலால் தாக்கியதோடு, கத்தியால் குத்தினர். காயம் அடைந்த அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அவர்கள் அளித்த புகாரின் படி, அருண், ராஜமாணிக்கம், மஞ்சுநாதன் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சூர்யாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X