92 நிலையங்களில் கொள்முதல் செய்த நெல் 11 கோடி கிலோ!

Updated : மே 17, 2022 | Added : மே 17, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
செங்கல்பட்டு,--செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் 92 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடமிருந்து 11 கோடி கிலோ நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நெல் விற்ற விவசாயிகளுக்கு 187 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய தாலுகாக்களில் நெல் அதிகளவில் விளை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

செங்கல்பட்டு,--செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் 92 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடமிருந்து 11 கோடி கிலோ நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

நெல் விற்ற விவசாயிகளுக்கு 187 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய தாலுகாக்களில் நெல் அதிகளவில் விளை விக்கப்படுகிறது.




latest tamil news



விவசாயிகள் அறுவடை செய்யும் நெல், மூட்டைகளாக கட்டப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தின் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், 92 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படுகின்றன.

அச்சிறுப்பாக்கத்தில் 19; மதுராந்தகம் 21; சித்தாமூர் 15; திருக்கழுக்குன்றம் 14; திருப்போரூர் 10; பவுஞ்சூர் ஒன்பது; காட்டாங்கொளத்துாரில் நான்கு என மொத்தம் 92 நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யப்படுகின்றன.விவசாயிகளிடம் சன்ன ரகம் கிலோ 20.60 ரூபாய், குண்டு ரகம் நெல் 20 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது; 40 கிலோ மூட்டை 800 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது.

மழையில் நனைந்து இருந்தால் காயவைத்த பின் அதே விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது. விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் மூட்டைகள், மதுராந்தகம் அடுத்த சிலாவட்டம், அண்டவாக்கம், திருக்கழுக்குன்றம் அடுத்த கீரப்பாக்கம் ஆகிய இடங்களில், தற்காலிக தானிய கிடங்குகளில் சேமிக்கப்படுகின்றன.

இவற்றில் ஆறு கோடி கிலோ நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க இடவசதி உள்ளது. இதில், சிலாவட்டம் தானிய கிடங்கில், 2.30 கோடி கிலோ நெல் மூட்டைகள் முழு கொள்ளளவில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது அண்டவாக்கம், கீரப்பாக்கம் ஆகிய தானிய கிடங்குகளில், நெல் மூட்டைகள் நிரப்பப்பட்டு வருகின்றன.மாவட்டத்தில் 15 ஆயிரத்து 910 விவசாயிகளிடமிருந்து 11 கோடி கிலோ நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நெல் மூட்டைகள் விற்ற விவசாயிகளுக்கு 187 கோடி ரூபாய் வினியோகம்
செய்யப்பட்டுள்ளது.

இந்த நெல் மூட்டைகள், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு, ரயில்கள் வாயிலாக அனுப்பப்படுகின்றன.தவிர செங்கல்பட்டு மாவட்டத்தில், 25 தனியார் அரவை ஆலைகளுக்கு, 2.5 கோடி கிலோ நெல் மூட்டைகள் அனுப்பப்பட்டு உள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்திற்கு 1 கோடி கிலோ; தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு, 60 லட்சம் கிலோ நெல் மூட்டைகள் அனுப்பப்பட்டுள்ளன.


latest tamil news



இந்நிலையில், சில நாட்களாக மழை வருவதால், நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் குவித்து வைத்துள்ள நெல் மூட்டைகள் உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.பெயர் வெளியிடாத தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக


அதிகாரி ஒருவர் கூறியதாவது:

செங்கல்பட்டு மாவட்டத்தில், 20 கோடி கிலோ நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 11 கோடி கிலோ நெல், விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதலுக்கேற்ப விவசாயிகளுக்கு 187 கோடி ரூபாய் வழங்கி உள்ளோம். இன்னும் ஆறு கோடி கிலோ நெல் கொள்முதலுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Salem,இந்தியா
17-மே-202217:52:00 IST Report Abuse
Mohan அரசாங்கத்திடம்..இடம் உள்ளது. இலவசமாக மணல், ஜல்லி சிமிண்ட், கம்பி தண்ணீர் உள்ளது. இனஜினியர்கள் அரசு வேலையில் உள்ளனர். 100 நிள் வேலை திட்டத்தில் ஆண், பெண் தொழிலாளர் உள்ளனர். ஏமாற்றும் காண்டிராக்டரிடம் விடாமல், அரசே தேவையான எண்ணிக்கையில் சேமிப்பு கிடங்குகளை கட்டினால். நெல் கொள்முதலை நஷ்டமில்லாமல், புழுத்து போகாமல் காப்பாற்றி வைக்கலாம். அதை விட்டு விட்டு டெல்லி விவசாயிகள் கிருத்திருமமாக இடைத்தரகர்களுக்கு பணம் கிடைப்பதற்காக நடத்தியய போராட்த்தை வானளாவ புகழ்ந்த திமுகவினர் இப்பொழுது எந்த முதலாளி காலில் விழுந்து நெல்லை சேமிக்கிறார்கள் என்று பார்க்கலாம். விவசாய விளை பொருட்களான தக்காளி,மாம்பழம் போன்றவற்றை மதிப்பு கூட்டி விற்க முயற்சி எதுவும் இந்த அரசு எடுப்பதாக தெரியவில்லை. ஹூம் நம்ம தலையெழுத்து.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
17-மே-202206:53:09 IST Report Abuse
Kasimani Baskaran அதாவது இவர்கள் இலவசம் மூலம் பொங்கல் தொகுப்பு கொடுத்த மதிப்பை விடக்குறைவு...
Rate this:
Cancel
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
17-மே-202206:13:15 IST Report Abuse
Fastrack எல்லா மளிகை கடைகளிலும் அரிசி விற்பனையாகிறதே ..எங்கிருந்து கொள்முதல் செய்கிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X