இது உங்கள் இடம்: ஆக்கிரமிப்புகளை பா.ஜ., ஆதரிக்கிறதா?

Updated : மே 17, 2022 | Added : மே 17, 2022 | கருத்துகள் (75) | |
Advertisement
எஸ்.ஆர்.சுப்பிரமணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை, தமிழக அரசு அகற்றத் துவங்கியுள்ளது.ஆனால், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் ஓட்டுக்காக, அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் நீர் நிலைகள் மீதான ஆக்கிரமிப்புக்கு ஆதரவு
 இது உங்கள் இடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

எஸ்.ஆர்.சுப்பிரமணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை, தமிழக அரசு அகற்றத் துவங்கியுள்ளது.ஆனால், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் ஓட்டுக்காக, அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் நீர் நிலைகள் மீதான ஆக்கிரமிப்புக்கு ஆதரவு தெரிவித்து, ஆலவட்டம் வீசி வருகின்றன. ஆக்கிரமித்து கட்டடம் கட்டியுள்ள இடங்களுக்கு, கட்சித் தலைவர்களின் பெயர்களை சூட்டி விட்டால், பின்னால் எந்த பிரச்னையும் வராது; வந்தால் பார்த்து கொள்ளலாம் என்று, துணை நின்று ஊக்குவித்தவர்களும் அவர்களே.


latest tamil newsஅந்த ஆக்கிரமிப்புகளுக்கு, மின்சார வசதி, குடிநீர் வசதி போன்றவற்றையும் செய்து கொடுத்து இருக்கின்றனர். இப்போது நீதிமன்றங்கள் அதிரடி உத்தரவுகள் பிறப்பித்ததும் பம்முகின்றனர். ஆனாலும், ஆக்கிரமிப்புகளை அகற்ற எவ்வளவு காலந்தாழ்த்த முடியுமோ, அவ்வளவு காலந்தாழ்த்தி கொண்டிருக்கின்றனர். நிலைமை இவ்வாறிருக்க, சென்னை, ஆர்.ஏ.புரம், கோவிந்தசாமி நகரில், ஆக்கிரமிப்பு எனக்கூறி, தன் வீட்டை இடித்ததை கண்டித்து, பா.ம.க., பிரமுகர் கண்ணையன் என்பவர் தீக்குளித்து இறந்தார்.
அவரது குடும்பத்தினரை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சந்தித்து ஆறுதல் கூறி இருக்கிறார். ஆறுதல் கூறியதோடு மட்டும் நின்றிருந்தால், பிரச்னை இல்லை.'ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு ஆதரவாக, ஏழை மக்கள் வசிக்கும் வீடுகளை, அரசு அவசரகதியில் இடித்துள்ளது. அவசரகதியில் ரியல் எஸ்டேட் நிறுவன ஊழியர்களை வைத்தே, வீடுகளை அரசு இடித்துள்ளது. 'அங்கு வசித்த மக்களை, சென்னைக்குள் அகதிகளாக மாற்றி விட்டு, திராவிட மாடல் அரசு என்று முதல்வர் ஸ்டாலின் பெருமை பேசுகிறார்' என்று சொல்லி இருப்பது தான் நெருடலாக உள்ளது; சந்தேகங்களை தோற்றுவிக்கிறது.

ஆக்கிரமிப்பு அகற்றம், நீதிமன்ற உத்தர வின்படி தான் நடக்கிறதே தவிர, ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு ஆதரவாக அல்ல. அண்ணாமலையின் பேட்டி, நீர்நிலைகள் மற்றும் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பவர்களை, பாரதிய ஜனதா கட்சியும் ஆதரிக்கிறதோ என்ற ஐயத்தை மக்கள் மனதில் தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது.பா.ஜ.,வும் ஒரு அரசியல் கட்சி தானே? அரசியல் கட்சி என்றாலே அத்துமீறல்கள் தானோ?


Advertisement
வாசகர் கருத்து (75)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
18-மே-202218:14:25 IST Report Abuse
r.sundaram இந்த ஆக்கிரமிப்பு நிலங்களில் கட்டிடம் கட்ட எப்படி அனுமதி கொடுக்கப்படுகிறது? அதன்பின் தண்ணீர் குழாய் இணைப்பு, மின் இணைப்பு என்பதெல்லாம் எப்படி கிடைக்கின்றன? கட்டிட அனுமதி கொடுக்கும்போதே இதை ஆக்கிரமிப்பா இல்லையா என்பதை சரிபார்த்தல், மனைகளை வாங்கியவர்களுக்கு, அந்த வாங்கிய செலவோடு நஷ்டம் நின்றுவிடும். இப்போது அனைத்தும், கட்டிடம் காட்டியது முதற்கொண்டு நஷ்டம் ஆகிறது அல்லவா? இதில் அரசு அதிகாரிகளுக்கு பொறுப்பு உண்டா இல்லையா? இன்று தாஜ்மஹாலுக்கு ஆவணம் தயார்பண்ணி விற்பனை செய்தால் அதை பதிவு செய்யுமா, பதிவுத்துறை? தற்போது பொது மக்களுக்கு ஏற்பட்ட இந்த நஷ்டத்திற்கு பதிவுத்துறை பொறுப்பு ஏற்குமா? சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து பொதுமக்களின் நஷ்டத்துக்கு ஈடு பெற முடியுமா? முடியும் என்றால், எதிர்காலத்தில் இந்தமாதிரி ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டடம் கட்டும் போக்கு நிற்கும்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
18-மே-202217:10:01 IST Report Abuse
sankaseshan முட்டாள் தமிழா துரத்த பட போவது விடியல் வாரிசு குடும்பமும் KD ப்ரோத்ர்சின் சன் TV குடும்பமும் தான்
Rate this:
Cancel
shjsjdk -  ( Posted via: Dinamalar Android App )
18-மே-202216:38:16 IST Report Abuse
shjsjdk NRI, and IT employees alone live in chennai, others live and born in chennai to get out of their livelihood, by the above said coporate syndicate, groups to loot the liveliness of the common chennai man, god and nature only as to give solution, iam the one among suffered by the earnings of the individual, who earns 100people salary and 1000 peoples salary per month, to demolish the chennai people lives.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X