வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கவுகாத்தி : நம் நாட்டின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் சர்வதேச எல்லை அருகே, சீனா கட்டுமானப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு உட்பட்ட அருணாச்சல பிரதேசத்தின் பல பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்நிலையில், இந்திய ராணுவ கிழக்கு படை தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஆர்.பி. கலிதா கூறியதாவது:அருணாச்சல பிரதேச சர்வதேச எல்லை அருகே சாலை, ரயில் வசதி, விமான போக்குவரத்துக்கான பணிகளை சீன ராணுவம் துரித கதியில் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், நாமும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறோம். கடுமையான மலைப் பகுதிகள், மோசமான வானிலை ஆகியவை தான் நம்கட்டமைப்பு பணிகளின் மேம்பாட்டிற்கு சவாலாக உள்ளன.எனினும் இந்திய ராணுவம் உச்சபட்ச விழிப்புடன் எத்தகைய சூழலையும் சமாளிக்கும் வகையில் தயாராக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
தலையிட வேண்டாம்
ஜம்மு - காஷ்மீரில் தொகுதி மறுவரையறை செய்வது பற்றி தேவையற்ற கருத்துக்களை கூறி,இந்தியாவின் உள் விவகாரத்தில் இஸ்லாமியஒத்துழைப்பு அமைப்பு மீண்டும் மூக்கை நுழைத்து உள்ளது. இதை இந்தியா வன்மையாககண்டிக்கிறது. இந்த அமைப்பு, பாக்.,கிற்குசாதகமாக வகுப்புவாத கொள்கையை பின்பற்றும் போக்கை நிறுத்த வேண்டும். ஜம்மு- காஷ்மீர்இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கம். இதை,இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பிடம் ஏற்கனவேஇந்தியா தெரிவித்துள்ளது.அரிந்தம் பக்சிவெளியுறவு துறை செய்தி தொடர்பாளர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE