வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜம்மு: அமர்நாத் யாத்திரை வரும் ஜூன் 30 ம் தேதி துவங்க உள்ளதைடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளார்.
கோவிட் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், வழக்கமான பாரம்பரிய முறைப்படி வரும் ஜூன் 30 அன்று அமர்நாத் யாத்திரை துவங்குகிறது.. இந்த ஆண்டு 43 நாட்கள் அமர்நாத் யாத்திரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனை நடத்துகிறார். இதில் மத்திய அமைச்சர்கள், உளவுத்துறை , எல்லை பாதுகாப்புப்படை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். யாத்திரையை சீர்குலைக்க பாக். ஐ.எஸ்.ஐ., உடன் இணைந்து பயங்கரவாதிகள் சதி திட்டத்தில் ஈடுபட கூடும் என உளவுத்துறை தகவலையடுத்து யாத்திரை மேற்கொள்வோருக்கு வழங்க வேண்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கிறார். கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு யாத்திரை துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE