புது கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை : பாரதியார் பல்கலை.தான் முதன்மை

Updated : மே 17, 2022 | Added : மே 17, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
கோவை:புதிய கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை பெறுவதில், பாரதியார் பல்கலை தொடர்ந்து மாநிலத்தில் முதல் இடத்தில் இருந்து வருகிறது என, பல்கலையின் அறிவுசார் காப்புரிமை மைய இயக்குனர் பரிமேலழகன் தெரிவித்தார்.காப்புரிமை மையங்களை, அனைத்து கல்வி நிறுவனங்களில் அமைக்கவும், இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. 2016ம் ஆண்டு
 புது கண்டுபிடிப்புகள், காப்புரிமை ,  பாரதியார் பல்கலை, முதன்மை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை:புதிய கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை பெறுவதில், பாரதியார் பல்கலை தொடர்ந்து மாநிலத்தில் முதல் இடத்தில் இருந்து வருகிறது என, பல்கலையின் அறிவுசார் காப்புரிமை மைய இயக்குனர் பரிமேலழகன் தெரிவித்தார்.


காப்புரிமை மையங்களை, அனைத்து கல்வி நிறுவனங்களில் அமைக்கவும், இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. 2016ம் ஆண்டு பாரதியார் பல்கலையில் அறிவுசார் காப்புரிமை மையம் துவக்கப்பட்டது. பல்கலையின் டெக்ஸ்டைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், மருத்துவ இயற்பியல், உயிரியல், பயோ- டெக்னாலஜி, இயற்பியல் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம், புதிய கண்டுபிடிப்புகள் குறித்த ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், காப்புரிமைக்கும் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகிறது.


latest tamil news



இதுவரை, 24 காப்புரிமைக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அதில் எட்டுக்கு காப்புரிமை பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள, 16 காப்புரிமைகள் பரிசீலனையில் உள்ளன. இதன் மூலம், தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் காப்புரிமை பெற்று, பாரதியார் பல்கலை தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. பல்கலையின் அறிவுசார் காப்புரிமை மைய இயக்குனர் பரிமேலழகன் கூறியதாவது: காப்புரிமை சார்ந்த விழிப்புணர்வு தற்போது பேராசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக, காப்புரிமைக்காக விண்ணப்பிப்பதும் அதிகரித்துள்ளது. பொதுவாக, காப்புரிமை பெறுவதற்கு அதிக கால அவகாசம் பிடிக்கிறது.

இது முறையான நடைமுறையே. காப்புரிமை பதிவு மற்றும் ஒப்புதலுக்கு, சென்னை, மும்பை, கொல்கத்தா, டில்லி ஆகிய நான்கு இடங்களில், காப்புரிமை அலுவலகங்கள் செயல்படுகின்றன. காப்புரிமைக்காக புதிய கண்டுபிடிப்பை பதிவு செய்யும், இந்த நான்கு அலுவலகங்களின் கீழ் உள்ள தேர்வாளருக்கு விண்ணப்பம் செல்லும். அந்த தேர்வாளருக்கு ஒதுக்கப்படும் விண்ணப்பங்களின் அடிப்படையில், கால அவகாசம் இருக்கும். தற்போது அனைத்து விண்ணப்பங்களுக்கும், விரைந்து ஒப்புதல் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் அண்ணா பல்கலை தவிர்த்து, பிற பல்கலைகளை ஒப்பிடும் போது, அதிக காப்பீடுகள் பதிவு செய்துள்ள பல்கலைகளில், பாரதியார் பல்கலை முன்னணியில் உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பெரிய ராசு - தென்காசி ,இந்தியா
17-மே-202214:07:35 IST Report Abuse
பெரிய ராசு யாரோ மண்டபத்தில் எழுதி கொடுத்து போட்ட மாதிரி இருக்கு..மோதலே நண்பகத்தன்மையை விசாரித்து போடவும். தனிமனித துதி பாடும் நிருபர்கள் கருத்தை போடவேண்டாம்... பாரதியார் பல்கலை கிடையாது ...அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் ...500 ரூ கவருக்கு வென காப்புரிமை வாங்கலாம்
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
17-மே-202206:44:03 IST Report Abuse
Kasimani Baskaran மாநிலத்தில் முதல்... சிறப்பு. எப்பொழுது சர்வதேச அளவில் முன்னேறப்போகிறார்கள்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X