திருச்செந்தூரில் புதிய தரிசன நடைமுறை அமல் :7 மணி நேரம் காத்திருப்பதால் பக்தர்கள் அவதி

Updated : மே 17, 2022 | Added : மே 17, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
திருச்செந்துார் முருகன் கோவிலில், புதிய தரிசன முறையால் பக்தர்கள் ஏழு மணி நேரம் கால்கடுக்க நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குற்றச்சாட்டுபக்தர்களின் காணிக்கை மூலம் பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. ஆனால், பக்தர்களுக்கு போதிய
  திருச்செந்தூர் , புதிய தரிசனம்   7 மணி நேரம் , அவதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருச்செந்துார் முருகன் கோவிலில், புதிய தரிசன முறையால் பக்தர்கள் ஏழு மணி நேரம் கால்கடுக்க நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.


குற்றச்சாட்டுபக்தர்களின் காணிக்கை மூலம் பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. ஆனால், பக்தர்களுக்கு போதிய வசதிகள், சுகாதார வசதிகள் இக்கோவிலில் இல்லை என்ற
குற்றச்சாட்டு உள்ளது.இரண்டு மாதங்களாக தரிசன முறையில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் தர்ம தரிசன முறை மட்டும் அமலில் உள்ளது. சுவாமியை தரிசனம் செய்ய தர்ம தரிசனம், கட்டண தரிசனம் என, இரு வரிசைகளில் பக்தர்கள் செல்ல வேண்டும்.

இறுதியாக இரண்டு வரிசைகளும் சேர்ந்து, ஒரே வரிசையாக சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். இவ்வாறு சுவாமி தரிசனம் செய்ய ஐந்து முதல் ஏழு மணி நேரம் வரை ஆகிறது.
அது வரை குழந்தைகள், பெரியவர்கள், முதியோர் என, அனைவரும் வரிசையில் கால்கடுக்க காத்திருக்க வேண்டியுள்ளது.முன்பு இதுபோன்ற நிலை இல்லை. தற்போது தான் சுவாமியை தரிசிக்க இவ்வளவு நேரம் ஆகிறது என, பக்தர்களிடம் குற்றச்சாட்டு உள்ளது.
இயற்கை உபாதைகளுக்கும், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் வரிசையில் இருந்து வெளியில் செல்வதற்கு பாதைகள் இல்லை. இதனால், பலர் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
புதிய தரிசன முறையால் பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து பல புகார்கள் வந்த போதிலும், கோவில் நிர்வாகம் இதை கண்டுகொள்ளவில்லை.புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இணை ஆணையர் பக்தர்களின் குறைகளை போக்கவும், விரைவில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.


latest tamil news
சேதமடைந்த சிற்பங்கள்!


கோயில் கோபுரத்தின் எதிரே உள்ள கல் வசந்த மண்டபத்தில் பங்குனி, வைகாசி மாதங்களில் ௧௦ நாட்கள் உற்சவம் நடத்தப்படும். சுவாமிக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான வைரங்கள் பதித்த தங்க நகைகள் அணிவிக்கப்படுகின்றன. அங்கு போலீஸ் பாதுகாப்பு இல்லை. தானியங்கி கேமராக்களும் இல்லை. அனைத்து மண்டபங்களிலும் தானியங்கி கேமராக்களை பொருத்த கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆவணி, மாசி திருவிழாக்களிலும் தனியார் மண்டபங்களுக்கு சுவாமி எழுந்தருளும் நாட்களிலும், தெய்வானை திருமண மண்டபத்திலும் கேமரா பொருத்த துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோவிலை சுற்றிய பகுதிகளை சுகாதாரமாக பராமரிக்கவும், கோவிலின் சிறிய கோபுரங்களில் சேதமடைந்த சிற்பங்களை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்


.
-- நமது நிருபர்- -

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivagiri - chennai,இந்தியா
17-மே-202214:26:25 IST Report Abuse
Sivagiri ஒன்றிய அரசு - அணைகள் பாதுகாப்பு மசோதா கொண்டு வந்து நாட்டின் அனைத்து அணைகள் பாதுகாப்பையும் கண்காணிப்பது போல , - - ஒன்றிய அரசே ஹிந்து-அறம் பாதுகாப்பு துறை என்ற ஒன்றை உருவாக்கி இந்தியாவில் உள்ள அனைத்து ஹிந்து கோவில்களையும் கண்காணித்து , பக்தர்கள் உரிமை / கோவில்கள் மற்றும் சொத்துக்கள் பாதுகாப்பு / கண்காணிக்க நடவடிக்கை எடுப்பதே இப்போது தேவை . . .
Rate this:
Cancel
கல்யாணராமன், மறைமலை நகர் பக்தர்கள் வருகையைக் குறைக்க திராவிட மாடல் அரசு கையாளும் நூதன வழி இது. பிறகு பக்தர்கள் வருகை குறைந்ததும் நகைகளை திருடி அரசியல்வாதிகள் கொள்ளை அடிக்க சேகர்பாபு அபாரமான திட்டம். இந்துக்கள் வழக்கம் போல் கொர்.....
Rate this:
Cancel
sridharan - chennai,இந்தியா
17-மே-202213:16:31 IST Report Abuse
sridharan கீழ்கண்ட யோசனைகளை கோயில் நிர்வாகம்/அரசு பரிசீலிக்க வேண்டும் ஸ்வாமி தரிசனத்துக்கு கட்டணம் கூடத்திய என்பதில் மாறு கருத்து இல்லை, ஆனாலும் ஐந்து /ஆறு மணி நேரம் ஆகிறது என்பதால் 1.தர்மம் தரிசன வரிசையும் நூறு ரூபா கட்டண வரிசையும் ஒரு கட்டத்தில் இணைவதால் நேரம் கூடுகிறது 2. தர்மம் தரிசனம் என்பதால் பார்த்தவர்கள் மீண்டும் மீண்டும் போக வாய்ப்புள்ளது, இதற்கு திருப்பதி போல் ஆதார் மூலம் மீண்டும் தர்மம் தரிசனம் செல்ல இடைவெளி கொண்டுவரலாம் 3.மூத்த குடிமக்கள் ஐந்து/ ஆறு மணி நேரம் நிற்க mudiyaadhu, அதுவும் சிறுநீர் கழிக்க கூட 4. திருப்பதி போல் சிறுநீர் கழிக்க குடிநீர் வசதி, கியூவில் உட்கார இடம் ஏற்படுத்தவேண்டும் 4. மூத்த குடிமக்கள் சிறுநீர் கழிக்க வசதி இல்லாமல் எப்படி ஐந்து/ ஆறு மணி , இவர்களுக்கு ஐநூறு/ ஆயிரம் ரூபாயில் உடனடி தரிசன வசதிக்கு தனி கியூ வைக்கலாம் (வெளி ஊரிலிருந்து வரும் மூத்த குடிமக்கள் இதை சந்தோசஷமாக ஏற்பர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X