வாரணாசி : வாரணாசி ஞானவாபி மசூதியில் மேற்கொள்ளப்பட்ட களவு ஆய்வு அறிக்கை இன்று சமர்பிக்கிறது ஐந்து பேர் அடங்கிய குழு.
உத்தர பிரதேசத்தில் வாரணாசியில் உள்ள விஸ்வநாதர் கோவில் அருகே உள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புறச் சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை உள்ளது.
இந்த சிலைக்கு தினமும் பூஜை செய்ய அனுமதி கோரி, வாரணாசியில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த உள்ளூர் நீதிமன்றம், மசூதியில் கள ஆய்வு மேற்கொள்ள, ஐந்து பேர் அடங்கிய குழுவை அமைத்தது. அறிக்கையை, 17 ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.இதையடுத்து, மசூதியில் ஆய்வு பணி துவங்கியது. இதையொட்டி, பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மசூதியில் கடந்த சில நாட்களாக ஆய்வு பணி அமைதியாக நடந்தது.
.இதுவரை அனைத்து ஆய்வுப் பணி முடிந்துள்ளதாக நிலையில் ஆய்வுக் குழுவினர் திட்டமிட்டபடி இன்று (மே. 17-) சமர்ப்பிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE