தலைமைச் செயலர்கள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு

Added : மே 17, 2022 | |
Advertisement
சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில் தரம்சாலா நகரில் அடுத்த மாதம், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்கள் மாநாடு இரண்டு நாட்கள் நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என கூறப்படுகிறது. இந்நிலையில், தலைமைச் செயலர்கள் மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம், முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தலைமையில் சிம்லாவில் நடந்தது. இதில், ஹிமாச்சல் தலைமைச் செயலர்

சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில் தரம்சாலா நகரில் அடுத்த மாதம், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்கள் மாநாடு இரண்டு நாட்கள் நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என கூறப்படுகிறது. இந்நிலையில், தலைமைச் செயலர்கள் மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம், முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தலைமையில் சிம்லாவில் நடந்தது. இதில், ஹிமாச்சல் தலைமைச் செயலர் ராம் சுபாக் சிங், நிடி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இதையடுத்து, தலைமைச் செயலர்கள் மாநாட்டில் பங்கேற்க, முதல்வர் தாக்குர் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கிடையே, மத்தியில் பா.ஜ., ஆட்சிப் பொறுப்பேற்று எட்டு ஆண்டுகள் ஆகியிருப்பதை கொண்டாடும் விழா, சிம்லா நகரில் 31ல் நடக்கிறது. இதையொட்டி நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். இம்மாநிலத்தில் டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், இந்தப் பொதுக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X