வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் உறவினர்கள் வீடுகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர்.

கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தமிழகத்தை சேர்ந்த ப.சிதம்பரம் நிதி மற்றும் உள்துறை அமைச்சராக பதவி வகித்தவர். அவர் வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொழில் தொடர்பாக பல்வேறு பணப்பரிமாற்றம் செய்துள்ளார். இது சட்டத்திற்கு புறம்பாக நடந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 2010 - 2014 ஆண்டுகளில் இவர் மற்றும் இவரது குடும்பத்தினர் அந்நியச்செலாவணி தொடர்பில் பல குற்றங்கள் புரிந்துள்ளதாக அமலாக்க துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது மேலும் ஒரு புதிய வழக்கு பதிவாகி உள்ளது. இதன் தொடர்பாக சி.பி.ஐ., இன்று (மே 17) ரெய்டு நடத்தி வருகிறது.
புதுடில்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட 9 இடங்களில் இந்த சோதனை நடக்கிறது. சிதம்பரம், மகன் கார்த்தி சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பல முறை பயணித்துள்ளார். இந்த அளவுக்கு அவர் பயணிக்க வேண்டிய காரணம் என்ன, எந்த காரணத்திற்கு அவர் சென்றார் என்ற பல்வேறு கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் சீனாவை சேர்ந்த சிலருக்கு ரூ.50 லட்சம் வாங்கி விசா வழங்கவும் லஞ்சம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

கார்த்தி சிதம்பரம் ரியாக் ஷன்:
சோதனை குறித்து கார்த்தி சிதம்பரம் கூறுகையில், ‛எத்தனை முறைதான் சோதனை நடத்துவீர்கள்? எத்தனை முறை சோதனை நடந்தது என்பதை நானே மறந்துவிட்டேன்' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE