8 சதவீத சரிவுடன் பங்குச்சந்தைகளில் பட்டியலானது எல்.ஐ.சி., பங்குகள்!

Updated : மே 17, 2022 | Added : மே 17, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று (மே 17) பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 சதவீதத்திற்கும் மேல் சரிவைச் சந்தித்து ரூ.867.2 என்ற விலையில் வர்த்தகமாகின. அந்த விலையில் பலரும் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டியதால் சரிவிலிருந்து சற்றே எழுந்து 11 மணி அளவில் ஒரு பங்கின் விலை ரூ.900 என்ற அளவில் வர்த்தகமாகிறது.எல்.ஐ.சி.,யின் ரூ.20,557 கோடி மதிப்பிலான
சரிவு, பங்குச்சந்தை, எல்ஐசி, பங்குகள், LIC, India, IPO, Discount, Tepid Debut,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று (மே 17) பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 சதவீதத்திற்கும் மேல் சரிவைச் சந்தித்து ரூ.867.2 என்ற விலையில் வர்த்தகமாகின. அந்த விலையில் பலரும் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டியதால் சரிவிலிருந்து சற்றே எழுந்து 11 மணி அளவில் ஒரு பங்கின் விலை ரூ.900 என்ற அளவில் வர்த்தகமாகிறது.

எல்.ஐ.சி.,யின் ரூ.20,557 கோடி மதிப்பிலான பங்குகளை விற்று மத்திய அரசு பணமாக்குகிறது. அதற்கான ஆரம்ப பங்கு வெளியீடு சில நாட்களுக்கு முன் துவங்கியது. இதில் எல்.ஐ.சி., பாலிசிதாரர்கள், ஊழியர்கள், சில்லரை முதலீட்டாளர்கள், நிறுவன முதலீட்டாளர்கள் ஆகியோர் ஆர்வமாக பங்கேற்றனர். மும்மடங்கிற்கு எல்.ஐ.சி., விண்ணப்பங்கள் சப்ஸ்கிரைப் செய்யப்பட்டன. ஆனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெரிதாக இதில் முதலீடு செய்யவில்லை.


latest tamil newsஇதற்கிடையே பங்குச்சந்தைகள் கடந்த ஒரு வாரமாக சரிவடைந்து வந்தன. பணவீக்கம், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவு, உற்பத்தி செலவுகள் கூடியது, வங்கி வட்டி விகித ஏற்றம் ஆகியவை சந்தையின் போக்கை பாதித்தன. திங்களன்று சற்றே ஏற்றத்துடன் இந்திய பங்குச்சந்தைகள் நிறைவடைந்தன. இன்றும் பச்சை நிறத்தில் தான் காணப்படுகின்றன. அதனால் எல்.ஐ.சி., லாப விலையில் பட்டியலாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.


latest tamil newsஆனால் ஒதுக்கப்பட்ட விலையை விட 8.11 சதவீதம் சரிந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை தந்தது எல்.ஐ.சி., பின்னர் அதிலிருந்து சற்றே மீண்டு 11 மணி நிலவரப்படி 5% சரிவில் தொடர்கிறது. பாலிசிதாரர்களுக்கு ரூ.889 என்ற தள்ளுபடி விலையில் ஒதுக்கப்பட்டதால் அவர்கள் ஒரு பங்கிற்கு சுமார் 10 ரூபாய் லாபம் பார்க்கலாம்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Somiah M - chennai,இந்தியா
17-மே-202219:22:23 IST Report Abuse
Somiah M எல் ஐ சி பங்குகளுக்கு எப்பொழுதுமே ஒரு டிமாண்ட் இருந்துகொண்டே இருக்கும் .இப்பொழுது அதற்கும் வீழ்ச்சி வந்துவிட்டதாகவே தோன்றுகிறது .எதனால் இந்நிலை ?
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
17-மே-202217:42:38 IST Report Abuse
jayvee LIC பங்குகள் நிச்சயமாக பெரிய அளவில் லாபம் தரக்கூடிய ஒன்று.. இதன்மூலம் பாலிசிதாரர்கள் எண்ணிக்கை இன்னும் கூடவும் செய்யும்
Rate this:
Cancel
17-மே-202215:53:09 IST Report Abuse
ஆரூர் ரங் கொரோனா பரவல் தூங்கியபோது ஐஆர்ஸிடிசி எனும் ரயில்வே நிறுவனப் பங்குகள் விவை கடுமையாக சரிந்தன. அப்போது பொறுமையாக வைத்திருந்தவர்களுக்கு இப்போது மூன்று நான்கு மடங்கு விலை கிடைக்கிறது. பொறுமையாக இருப்பவர்களுக்குத்தான் பங்குச்சந்தை.இன்று கூட LIC சிறு முதலீட்டாளர்களுக்கு மூன்றே கால் சதவீதம்தான் நட்டம் . சந்தையில் இது மிகச்சிரிய சரிவே.🤔 இது இன்னும் சில நாட்களில் அல்லது மாதங்களில் சரியாகிவிடும். உக்ரைன் போர் காரணமாக சந்தை நிலை சரியில்லை. அவ்வளவுதான். பொறுத்தார் பூமியாள்வார்.
Rate this:
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
17-மே-202217:13:59 IST Report Abuse
Rajநிலை சரியில்லாத போது, தரபோதைய நிலைக்கேட்ப வெளியிட்டு விலையை குறைந்து வெளியிட்டு இருக்கலாம் அல்லாவா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X