கோதுமை கொடுங்க, சாப்பாட்டு பிரச்னை வருது: இந்தியா மீது நம்பிக்கை வைக்கும் அமெரிக்கா

Updated : மே 17, 2022 | Added : மே 17, 2022 | கருத்துகள் (30) | |
Advertisement
வாஷிங்டன்: கோதுமை ஏற்றமதிக்கு விதித்த தடையை இந்தியா மறுபரிசீலனை செய்யும் என அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.உலகிலேயே அதிக அளவில் கோதுமை உற்பத்தி செய்யும் நாடுகளில், சீனாவுக்கு அடுத்த படியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. சர்வதேச அளவில் கோதுமைக்கான தேவை அதிகரித்து உள்ளது. இதன் எதிரொலியாக, சர்வதேச அளவில் கோதுமையின் விலையும் உயர்ந்துள்ளது. உள்நாட்டில் உணவு
US, India, reconsider, wheat, exports, curb decision, கோதுமை, ஏற்றுமதி, இந்தியா,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

வாஷிங்டன்: கோதுமை ஏற்றமதிக்கு விதித்த தடையை இந்தியா மறுபரிசீலனை செய்யும் என அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

உலகிலேயே அதிக அளவில் கோதுமை உற்பத்தி செய்யும் நாடுகளில், சீனாவுக்கு அடுத்த படியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. சர்வதேச அளவில் கோதுமைக்கான தேவை அதிகரித்து உள்ளது. இதன் எதிரொலியாக, சர்வதேச அளவில் கோதுமையின் விலையும் உயர்ந்துள்ளது. உள்நாட்டில் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும், கோதுமை ஏற்றுமதிக்கு உடனடி தடை விதித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் அதிருப்தி தெரிவித்திருந்தன.


latest tamil news


இந்நிலையில், ஐ.நா.,வுக்கான அமெரிக்காவின் பிரதிநிதி தாமஸ் கிரீன்பீல்ட், சர்வதேச உணவு பாதுகாப்பு தொடர்பாக நியூயார்க்கில் நிருபர்களிடம் கூறியதாவது: ஏற்றுமதிக்கு தடை விதிக்கக்கூடாது என உலக நாடுகளை அறிவுறுத்தி வருகிறேம். ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்தால், அது உணவு பற்றாக்குறையை உருவாக்கிவிடும். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த கூட்டத்தில் இந்தியாவும் கலந்து கொண்டது. மற்ற நாடுகளின் கவலையை இந்தியா கேட்டுள்ளது. கோதுமை ஏற்றுமதி குறித்த தனது நிலையை இந்தியா மறுபரிசீலனை செய்யும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
17-மே-202222:12:15 IST Report Abuse
sankaseshan தர்மராஜுவுக்கு மத்திய அரசைகுற்றம் சொல்லவிட்டால் தூக்கம் வராது . இயற்கை சீற்றத்தின்விளைவுகள் மனிதனின்கையில் இல்லை , முடிந்தவரை தானிய உற்பத்தியைஏற்றுமதி இறக்குமதியை கட்டுக்குள் வய்த்திருக்கின்றனர் . காங்கிரஸ்ஆட்சியில் கெட்டுப்போன கோதுமைபால் பவுடர் அமெரிக்க காரன்நம் தலையில் கட்டினான் இப்போ நம்மிடம் கையேந்துகிறான்
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
17-மே-202222:08:57 IST Report Abuse
Ramesh Sargam இந்திய தடையை நீக்கி கோதுமை தேவைப்படும் நாடுகளுக்கு கொடுத்து உதவவேண்டும். அப்பொழுதுதான், நாளைக்கு நமக்கு ஏதாவது பிரச்சினை என்றால் நமக்கு அவர்கள் உதவ முன்வருவார்கள். அதுவும் அவர்கள் 'சாப்பாட்டு பிரச்னை வருது' என்று வெளிப்படையாகவே கேட்கிறார்கள். இந்த நேரத்தில் நாம் அவர்களுக்கு உதவியே ஆகவேண்டும்.
Rate this:
Cancel
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
17-மே-202220:15:10 IST Report Abuse
MARUTHU PANDIAR ஜார்ஜ் புஷ்ஷு,, புஷ்ஷுன்னு ஒரு அமெரிக்க அதிபராம்-அந்தாளு அன்று திருவாய் மலர்ந்து கூறியது என்ன தெரியுமா? இந்தியர்களால் தான் உலகிலேயே உணவுப் பஞ்சம் ஏற்பட்டு விட்டதாம் -அந்த அளவுக்கு இந்தியர்கள் எல்லோரும் சாப்பாட்டு ராமன்களாம்தின்று தீர்க்கிறார்களாம்நா கூசாமல் பேசினான் அன்றுஇன்று நிலமையைப் பார்த்தீர்களா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X