ஊழலின் அடையாளம் 2ஜி: பிரதமர் தாக்கு

Updated : மே 17, 2022 | Added : மே 17, 2022 | கருத்துகள் (44) | |
Advertisement
புதுடில்லி: அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவால் 6ஜி சேவையை துவங்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, கொள்கை முடக்கம் மற்றும் ஊழலின் அடையாளமாக 2ஜி இருந்ததாக விமர்சித்துள்ளார்.இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் 1997ல் துவக்கப்பட்டது. அதன் 25ம் ஆண்டு நிகழ்வு இன்று கொண்டாடப்படுகிறது. இந்த வெள்ளிவிழா நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பங்கேற்ற பிரதமர்
India, Aiming, 6G, Roll Out, 6G Network, End Of Decade, PM Modi, இந்தியா, 6ஜி, 5ஜி, பிரதமர் மோடி, டிராய்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவால் 6ஜி சேவையை துவங்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, கொள்கை முடக்கம் மற்றும் ஊழலின் அடையாளமாக 2ஜி இருந்ததாக விமர்சித்துள்ளார்.

இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் 1997ல் துவக்கப்பட்டது. அதன் 25ம் ஆண்டு நிகழ்வு இன்று கொண்டாடப்படுகிறது. இந்த வெள்ளிவிழா நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பங்கேற்ற பிரதமர் மோடி, 5ஜி அலைக்கற்றை சோதனையை துவக்கி வைத்தார்.

பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: 8 ஆண்டுகளில் தொலைத்தொடர்பு துறையில் ஏராளமான புதிய ஆற்றலை உட்புகுத்தி உள்ளோம். 2ஜி சகாப்தம், கொள்கை முடக்கம், ஊழல் ஆகியவற்றின் அடையாளமாக இருந்தது. 3ஜியில் இருந்து 4ஜிக்கு வேகமாக முன்னேறியுள்ளது. தற்போது 5ஜிக்கு மாறியுள்ளது.


latest tamil news


இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. நாட்டின் பொருளாதாரத்திற்கு சுமார் 450 பில்லியன் டாலர் அளவிற்கு 5ஜி தொழில்நுட்பம் பங்காற்றும். 5ஜி தொழில்நுட்பம் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையான விஷயம். இது இணைய வேகத்தை அதிகரிப்பது மட்டுமல்ல, வளர்ச்சியின் வேகத்தையும், வேலைவாய்ப்புகளையும் உருவாக்குகிறது.

நாட்டில் உள்ள கிராமங்கள் அனைத்திற்கும் 5ஜி தொழில்நுட்பத்தை கொண்டு சேர்க்க வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளில் நம்மால் 6ஜி சேவையை துவங்க முடியும். 6ஜி தொழில்நுட்ப சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venugopal S -  ( Posted via: Dinamalar Android App )
18-மே-202213:58:01 IST Report Abuse
Venugopal S 2024 பாராளுமன்றத் தேர்தலில் மட்டும் பாஜக தோல்வி அடைந்தால் அதன் பிறகு திஹார் ஜெயில் நிரம்பி வழியும்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
17-மே-202220:51:02 IST Report Abuse
Ramesh Sargam ஊழலின் அடையாளம் 2ஜி. ஆனால் இதில் வேதனை என்னவென்றால், அந்த ஊழலில் சம்பந்தப்பட்ட ஒருவரும் இன்றுவரை தண்டனைபெறவில்லை என்பதுதான். அட, அவர்கள் தெனாவட்டாக இன்றும் சுற்றி திரிகிறார்கள் சுதந்திரமாக - "பார் எங்களை யாரும் அசைக்க முடியாது" என்று கூறிக்கொண்டு. அப்படி அவர்கள் சுற்றித்திரிவதற்கு காரணம், நம் நாட்டின் நீதிமுறை.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
17-மே-202220:45:19 IST Report Abuse
Kasimani Baskaran இங்கு பல பக்கிகள் மோடி மீது கடுப்பில் இருக்கிறார்கள். அவர்களின் நடவடிக்கை ஞாயமில்லாதது. ஏனென்றால் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்க சட்டமே இயற்றிவிட்டது. ஆனால் நீதிமன்றம் சட்டத்தை மதிக்காமல் இன்னும் பல வழக்குகளை எருமை வேகத்திலேயே விசாரிக்கிறது. அதில் 2ஜி மற்றும் வணிகர் சம்பந்தப்பட்ட வழக்கும் அடங்கும். திமுகவினர் யோக்கியர்கள் இல்லை என்று நிரூபிக்க அந்த மறு ஏலமே போதுமானது. இருந்தும் திமுக அடிமைகள் வெட்கமேயில்லாமல் உருட்டுவது மோடி எதிர்ப்பு காரணமாகவே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X