சென்னையில் ரூ.25 கோடி மதிப்பிலான பச்சைக்கல் லிங்கம் மீட்பு: இருவர் கைது

Updated : மே 17, 2022 | Added : மே 17, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
சென்னை: சென்னையில் ரூ.25 கோடி மதிப்பிலான தொன்மையான பச்சைக்கல் லிங்கத்தை விற்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பச்சைக்கல் லிங்கம் மீட்கப்பட்டது.சென்னை பூந்தமல்லி அருகே தொன்மையான உலோக நாகாபரணத்துடன் கூடிய பச்சைக்கல் லிங்கமொன்று பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், கடத்தப்பட உள்ளதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ
பச்சைக்கல், லிங்கம், மீட்பு, சிலை, சென்னை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: சென்னையில் ரூ.25 கோடி மதிப்பிலான தொன்மையான பச்சைக்கல் லிங்கத்தை விற்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பச்சைக்கல் லிங்கம் மீட்கப்பட்டது.

சென்னை பூந்தமல்லி அருகே தொன்மையான உலோக நாகாபரணத்துடன் கூடிய பச்சைக்கல் லிங்கமொன்று பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், கடத்தப்பட உள்ளதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்ய சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் இயக்குனர் ஜெயந்த் முரளி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி, பச்சைக்கல் லிங்கம் வைத்திருப்பவர்களிடம் சிலைகளை வாங்கும் வியாபாரிகள் போல் நடித்து பேசியுள்ளனர்.


latest tamil news


அப்போது அச்சிலை ரூ.25 கோடி என அதிகாரிகள் எனத் தெரியாமல் விலையை கூறியுள்ளனர். பின்னர் சிலையை காண்பித்ததும் அவர்களை கையும் களவுமாக அதிகாரிகள் பிடித்தனர். இதனையடுத்து சிலையை விற்க முயன்றதாக சென்னை வெள்ளவேடு புதுகாலனியை சேர்ந்த பக்தவச்சலம் (எ) பாலா (வயது 46) மற்றும் சென்னை புதுசத்திரம் கூடப்பாக்கம் கலெக்டர் நகரை சேர்ந்த பாக்கியராஜ் (வயது 42) ஆகியோரை கைது செய்து போலீஸ் எஸ்.ஐ., ராஜசேகர், அவர்களிடம் இருந்து சிலையை கைப்பற்றினார்.

பின்னர், அந்நபர்களை சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஒப்படைத்தார். கைப்பற்றப்பட்ட அந்த பச்சைக்கல் லிங்கத்தில், உலோகத்தால் ஆகிய நாகாபரணம் உள்ளது. அதை தாங்கி அதன் பின்புறம் பறக்கும் நிலையில் கருடாழ்வர் சுமார் 29 செ.மீ உயரமும் 18 செ.மீ அகலமும் கொண்டுள்ளது. அதன் எடை சுமார் 9 கிலோ 800 கிராம் எடையும் உள்ளது. இந்தச் சிலையானது 500 ஆண்டுகள் தொன்மையானது எனவும் கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-மே-202214:01:26 IST Report Abuse
ஆரூர் ரங் இதுபோன்ற நாகர் இருப்பதால் இந்த விக்கிரகம் உ.பி அல்லது நேபாள கோவிலில்🙄 திருடப்பட்டதாக இருக்கும்.
Rate this:
Cancel
Naagarazan Ramaswamy - Chennai,இந்தியா
18-மே-202206:10:33 IST Report Abuse
Naagarazan Ramaswamy மாணிக்கவேல் இருந்திருந்தால் முன்னரே இவர்கள் பிடிபட்டிருப்பார்கள். அரசு அவரது ஆலோசனையை நாடினால் மேலும் நல்ல பலன் கிடைக்குமே.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
17-மே-202222:31:45 IST Report Abuse
Ramesh Sargam ஆமாம் இவ்வளவு விலை மதிப்புள்ள அந்த பச்சைக்கல் லிங்கம் இவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது? இவர்கள் போன்று எத்தனை கள்வர்கள் சென்னையில் உள்ளனர்? இதுபோன்ற சிலைதிருட்டு, விற்பனையில் ஒருவர், இருவர் மட்டும் இருக்க முடியாது. ஒரு பெரிய கும்பலே இதுபோன்ற விஷயங்களில் ஈடுபட்டிருக்கும். எல்லோரையும் பிடித்து, அவர்களிடம் உள்ள விலைமதிக்கமுடியாத பொருட்களை மீட்கவேண்டும்.
Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
18-மே-202211:38:55 IST Report Abuse
pradeesh parthasarathyகோவிலின் கருவறைக்குள் நுழைந்து எடுக்க முடியும் என்றால் அது நிச்சயம் உயர் சாதி அர்ச்சகரால் தான் முடியும் ... நன்கு விசாரித்து அர்ச்சகர்கள் யார் யாரெல்லாம் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X