உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா? பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்

Updated : மே 18, 2022 | Added : மே 17, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
புதுடில்லி: ஜம்மு காஷ்மீர் தொகுதி மறுவரையறை குறித்து பாகிஸ்தான் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிராகரித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட உரிமையில்லை எனக்கூறியுள்ளது.ஜம்மு காஷ்மீரில் தொகுதி மறுவரையறை குறித்து பாகிஸ்தான் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை
India, Pakistan, farcical resolution, J-K, delimitation, இந்தியா, பாகிஸ்தான், தீர்மானம், ஜம்முகாஷ்மீர், நிராகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: ஜம்மு காஷ்மீர் தொகுதி மறுவரையறை குறித்து பாகிஸ்தான் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிராகரித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட உரிமையில்லை எனக்கூறியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் தொகுதி மறுவரையறை குறித்து பாகிஸ்தான் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியதாவது: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச தொகுதி மறுவரையறை தொடர்பாக பாகிஸ்தான் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முற்றிலுமாக நிராகரிக்கிறோம். அந்நாடு ஆக்கிரமித்த இந்திய பகுதிகள் மற்றும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதற்கும், கருத்து கூறுவதற்கும் பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை. ஜம்மு காஷ்மீர் மற்றும் யூனியன் பிரதேசம் மற்றும் லடாக் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். எதிர்காலத்திலும் அதுவே நீடிக்கும்.


latest tamil news


தங்கள் சொந்த நாட்டை கட்டமைக்க முடியாத பாகிஸ்தான் தலைவர்கள் இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதுடன், இந்தியாவிற்கு எதிராக பொய்ப்பிரசாரம் செய்து வருகின்றனர். இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாத செயல்களை கட்டுப்படுத்துவதுடன், பயங்கரவாத உள்கட்டமைப்புகளை நிறுத்த வேண்டும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அந்நாடு சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் மாற்றங்களை ஏற்படுத்துவதை நிறுத்துவதுடன், அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
18-மே-202204:36:07 IST Report Abuse
J.V. Iyer பாக்கிகள் ஆக்கிரமித்துள்ள இந்தியாவை மீட்டுக்கொள்ள இதுதான் சமயம் .
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
17-மே-202222:21:28 IST Report Abuse
Ramesh Sargam பாக்கிஸ்தான் மீது மீண்டும் ஒரு surgical strike செய்தல் மிக மிக அவசியம். இல்லையென்றால் அவர்கள் அடங்கமாட்டார்கள்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
17-மே-202220:30:43 IST Report Abuse
Kasimani Baskaran பாக்கிகளுக்கு திவாலானாலும் திமிர் மட்டும் போகாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X