சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை: கே.எஸ்.அழகிரி கேள்வி

Added : மே 17, 2022 | |
Advertisement
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது: எத்தனை முறை சிதம்பரம் வீட்டில் சோதனை நடத்துவீர்கள். ஒரு முறை சோதனை நடத்திய போது அனைத்து காகிதங்களை எடுத்து சென்றீர்கள். இப்போது புதிதாக எந்த காகிதம் இருக்கும். இரண்டாவது முறையாக சோதனை நடத்திய போது ஆவணம் கிடைக்கவில்லையா. சோதனைக்கு பிறகு என்ன ஆவணம் கிடைத்தது எனக்கூற வேண்டும்.பொத்தாம் பொதுவாக ஆவணம் கிடைத்தது
சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை: கே.எஸ்.அழகிரி கேள்வி

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது: எத்தனை முறை சிதம்பரம் வீட்டில் சோதனை நடத்துவீர்கள். ஒரு முறை சோதனை நடத்திய போது அனைத்து காகிதங்களை எடுத்து சென்றீர்கள். இப்போது புதிதாக எந்த காகிதம் இருக்கும். இரண்டாவது முறையாக சோதனை நடத்திய போது ஆவணம் கிடைக்கவில்லையா. சோதனைக்கு பிறகு என்ன ஆவணம் கிடைத்தது எனக்கூற வேண்டும்.

பொத்தாம் பொதுவாக ஆவணம் கிடைத்தது எனக்கூறுவது கீழ்த்தரமான செயல், இது நேர்மையற்ற செயல் என எச்சரிக்கிறோம். அவரின் புகழையும் பெருமையையும் குழைக்க செய்ய சோதனை நடக்கிறது. இது கீழ்த்தரமான செயல் என்பதை விட வேறு ஒன்றும் சொல்ல முடியாது.

கவர்னர் தமிழகத்திற்கு வந்த பிறகு பேச கற்றுக்கொண்டார். தமிழை பிற மாநிலங்களில் 3வது மொழியாக கொண்டு வர முயற்சி செய்வேன் எனக்கூறுகிறார். அது கூட செய்ய வேண்டும். இங்கு தமிழ் வாழ வழிவிட்டாலே போதும். ஹிந்தியை திணிக்கும் முயற்சியில் இறங்க வேண்டாம் என்பது எங்களது வேண்டுகோள். ராஜ்யசபா தேர்தல் வேட்பாளர் குறித்து 2 அல்லது 3 நாளில் அறிவிப்பு வெளியாகும். யாரும் கோரிக்கை வைக்கவில்லை. இவ்வாறு அழகிரி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X