வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: டுவிட்டரில் 20 சதவீத கணக்குகள் போலி எனவும், 5 சதவீதத்திற்கும் குறைவாக போலி கணக்குகள் உள்ளது என்ற ஆதாரத்தை நிரூபிக்காத வரையில் டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தம் முன் நகராது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரை, ரூ.3.34 லட்சம் கோடிக்கு வாங்க உள்ளதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் நிறைவடையவில்லை. இதற்கிடையே போலி டுவிட்டர் கணக்குகளை முடக்க உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மொத்த டுவிட்டர் பயன்பாட்டாளர்களில் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே போலி கணக்குகள் உள்ளதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்தது.

இதனையடுத்து, ‛போலி கணக்குகள் குறித்து தகவல்கள் திரட்டுவதற்கு அவகாசம் தேவைப்படுவதால், டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக' எலான் மஸ்க் அறிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது எலான் மஸ்க் தெரிவித்துள்ளதாவது: டுவிட்டர் நிறுவனம் கூறுவதை விட நான்கு மடங்கு அதிகமாக சுமார் 20 சதவீதம் வரை போலி கணக்குகள் இயங்கி வருகின்றன. இன்னும் கூடுதலாகவும் இருக்கலாம்.

டுவிட்டர் நிறுவனம் இதுவரை அமெரிக்க அரசின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தில் மேற்கொண்ட கணக்குகளின் அடிப்படையில் எனது வாங்கும் தொகை முன்வைக்கப்பட்டது. நேற்று, டுவிட்டர் சி.இ.ஓ பொதுவெளியில் டுவிட்டரில் 5 சதவீதத்திற்கும் குறைவாக போலி கணக்குகள் உள்ளது என்ற ஆதாரத்தை டுவிட்டர் சி.இ.ஓ பொதுவெளியில் வெளியிட மறுத்துவிட்டார். அவர் அதை நிரூபிக்காத வரையில் இந்த ஒப்பந்தம் முன் நகராது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE