
இப்போதெல்லாம் பறவையின் மீது ஆர்வம் கொண்டு பொங்கும் இளஞைர்கள் நாங்கள் பறவையை காப்பாற்ற என்ன செய்ய வேண்டும் என்று துடிப்போடு கேட்கின்றனர் அவர்களுக்கு எல்லாம் ஒரே பதில் நீங்கள் பறவைகளை காப்பாற்ற எதுவும் செய்யவேண்டாம் அவைகளுக்கு தங்களை காப்பாற்றிக்கொள்ள தெரியும் நீங்கள் அவைகளை தொந்திர செய்யாமல் இருந்தாலே போதும் என்கிறார் பறவைகளை படம் எடுப்பதில் வல்லுனராக பல் டாக்டர் டீன்ராஜா.

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் பல் மருத்துவராக பணியாற்றும் டீன்ராஜாவிற்கு இயற்கையின் மீது ம் பறவைகள் மீதும் அளப்பரிய அன்பு உண்டு. பறவைகளை அதிகம் நேசிக்கும் அவர் அது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் குறிப்பாக பள்ளி,கல்லுாரி மாணவ மாணவியரிடம் கொண்டு போய்ச்சேர்க்கவேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டுள்ளார்.

இதற்கு இவர் தேர்ந்தெடுத்த உபகரணம்தான் கேமிரா,ஒரு பறவையை அதன் இயல்பிலேயே படம் எடுக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் இவர் இதற்காக நாடு முழுவதும் தனது தேடலை கொண்டுள்ளார்.

புகைப்படக்கலை என்பது தவம் மாதிரி எதையும் உள்ளது உள்ளபடி எடுப்பது என்பது அதில் தியானம் மாதிரி என்று கவித்துமாக வார்த்தைகளை உதிர்க்கும் இவரது பறவை படங்கள் புதுச்சேரி புகைப்படக்கழகம் நடத்திய போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளது இது போல இன்னும் பல விருதுகளை பெற்றுள்ள இவரது விழிப்புணர்வு எண்ணம் ஈடேற வாழ்த்த்துக்கள்.

டீன்ராஜாவை பாராட்ட விரும்புபவர்களுக்கான தொடர்பு எண்:99623 90447.
-எல்.முருகராஜ்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE