ஆண் குழந்தைகளை அதிகம் பெற விரும்பும் இந்தியர்கள்: கருத்துக்கணிப்பு தகவல்

Updated : மே 18, 2022 | Added : மே 17, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
புதுடில்லி: இந்தியர்கள் ஆண் குழந்தைகளை அதிகம் பெற விரும்புவதாக கருத்துக்கணிப்பு ஒன்று தகவல் அளிக்கிறது.சமீபத்தில் இந்தியாவில் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பில் இந்தியாவில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட தம்பதிகள் தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளில் ஒரு குழந்தையாவது ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: இந்தியர்கள் ஆண் குழந்தைகளை அதிகம் பெற விரும்புவதாக கருத்துக்கணிப்பு ஒன்று தகவல் அளிக்கிறது.



latest tamil news


சமீபத்தில் இந்தியாவில் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பில் இந்தியாவில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட தம்பதிகள் தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளில் ஒரு குழந்தையாவது ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தெரியவந்துள்ளது.

இந்திய சமூகத்தில் குடிமக்கள் பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளையே அதிகம் பெற விரும்புவதாக இதன்மூலம் தெளிவாகிறது.
கடந்த 100 ஆண்டுகளில் இந்தியாவில் பெண்களை ஒப்பிடுகையில் ஆண்களின் எண்ணிக்கை அதிகம் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரம் கூறுகிறது.


latest tamil news



கடந்த 2011ம் ஆண்டு தேசிய அளவில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் ஆயிரம் ஆண்களுக்கு 940 பெண்கள் மட்டுமே உள்ளது தெரியவந்தது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய குடும்பங்களில் ஆண் குழந்தை பெற பல குடும்பத்தினர் விரும்பியதன் காரணமாக ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்ததாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது கல்வி, தொழில்நுட்பம், சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் இந்தியா முன்னேறி இருக்கும் போதிலும் பெரும்பாலான குடும்பங்களில் ஆண் குழந்தைகளை பெறவே பெற்றோர் விரும்புவது குறிப்பிடத்தக்கது.
இந்த கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட பெற்றோர்கள் பலர் தாங்கள் ஒன்றிற்கும் மேற்பட்ட ஆண் குழந்தைகளை பெற்றுக்கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் பலர் அடுத்தடுத்து பெண் குழந்தைகளைப் பெறுவதால் எப்படியாவது ஆண் குழந்தையைப் பெற்றாகவேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப் படுகின்றனர்.

ஆண் குழந்தைகள் மீதான எதிர்பார்ப்பு காரணமாகவே இவர்கள் பல குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டி உள்ளது. இதனால் நாட்டின் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது என கூறுகிறது இந்த கருத்துக்கணிப்பு.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
19-மே-202214:52:35 IST Report Abuse
Rafi பெண்களுக்கு தற்காப்பு புத்தி அதிகம், ஆண்கள் நிலையோ விட்டு கொடுக்கும் பண்பு அதிகம். பெற்றோர்களை துரத்த காரணம் கூட பெரும்பகுதி வரும் பெண்களாலேயே நடந்தேறுகின்றது. இஸ்லாம் பெற்றோர்களை காப்பது ஆணின் கடமை என்று சொன்னதோடல்லாமல், அவர்களை அரவணைப்பவர்கள் தான் சுவர்க்கம் போக முடியும் என்று வழியுறுத்தி இருக்கு.ஆண் தான் பெற்றோர் மற்றும் கைவிடப்பட்ட சகோதரிகளுக்கும் பொறுப்பாக முடியும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கு. குடும்ப வாரிசு சந்ததி என்பதே ஆணின் ரத்த அணுக்களை கொண்டே நிர்ணயிக்கப் படுகின்றது. குழந்தையின் முழுப்பங்கும் ஆணிலிருந்தே நிர்ணயிக்கப்படுகின்றது. மனிதர்களில் போற்றப்படுபவர்களில் இறை தூதருக்கு அடுத்த நிலையில் 2, 3, 4 வரை தாய்மைக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கு, ஐந்தாவது இடம் தான் தந்தை தொடர்ந்து சகோதர சகோதரிகள், தந்தை கூட பிறந்த சகோதரர்கள் என்று உறவுமுறை தொடரும். நாட்டு தலைவர்கள் எல்லாம் உறவு முறைக்கு அடுத்த நிலையில் தான்.
Rate this:
Cancel
18-மே-202204:38:53 IST Report Abuse
adharma eeyaratnam கடைசி காலத்திலே காப்பாத்தலைன்னா கேசு போட்டுக்கலாம்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
17-மே-202220:31:33 IST Report Abuse
Ramesh Sargam நாட்டில் எவ்வளவோ தம்பதிகளுக்கு கல்யாணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாமல், கோவில் கோவிலாக சுற்றி வேண்டிக்கொள்வதும், விரதம் இருப்பதும் என்று செய்து ஏதாவது ஒரு குழந்தை (ஆண் அல்லது பெண்) பிறக்காதா என்று அல்லல் படுகின்றனர். இதில் ஒரு சிலர் ஆண் குழந்தை மட்டும்தான் வேண்டும் என்று எதிர்பார்ப்பது வேதனை அளிக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X