வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: ஒலியைவிட ஐந்து மடங்கு வேகத்தில் பாயும் அதிநவீன அமெரிக்க ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக அமெரிக்க விமானப்படை பெருமிதம் தெரிவித்துள்ளது.

கடந்த மே 11ம் தேதி அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா கடற்கரை அருகே 'ஏ.ஜி.எம் 183-ஏ' என்கிற ஒலி அலைகளைவிட வேகமாக பாயக்கூடிய ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த வான்வழி சோதனை வெற்றி பெற்றதாக அமெரிக்க விமானப்படை அறிவித்துள்ளது. இதனால் உலகின் அதிநவீன ஹைபர்சோனிக் ஏவுகணை அமெரிக்காவிடம் இருப்பதாக கூறப்படுகிறது. ஒலி அலைகளைவிட ஐந்து மடங்கு வேகத்தில் சீறிப்பாய்ந்த ஹைபர்சோனிக் ஏவுகணை துல்லியமாக கடல் இலக்கை அடைந்ததாக லெப்டினன்ட் மைக்கேல் தகவல் அளித்துள்ளார்.

எதிர்காலத்தில் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் இந்த ஏவுகணை பயன்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. ரஷ்யா, வட கொரியா உள்ளிட்ட நாடுகள் அதிநவீன ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுவரும் நிலையில் அமெரிக்காவின் இந்த சோதனை வெற்றி, ரஷ்யா, வடகொரியா நாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் கருத்து பகிரப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE