அசாமில் வெள்ளம்: 2 லட்சம் பேர் பாதிப்பு

Updated : மே 17, 2022 | Added : மே 17, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
கவுகாத்தி : அசாமில், தொடர்ந்து பெய்து வரும் கன மழையால், பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.நிலச்சரிவு அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, கடந்த சில நாட்களாக, தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில்

கவுகாத்தி : அசாமில், தொடர்ந்து பெய்து வரும் கன மழையால், பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.



latest tamil news




நிலச்சரிவு


அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, கடந்த சில நாட்களாக, தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததைஅடுத்து, இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை, வெள்ளத்துக்கு இதுவரை ஏழு பேர் பலியாகிவிட்டதாக, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துஉள்ளது.கேட்சர், சரேடியோ, தாரங், தேமாஜி, திப்ருகர், நல்பாரி உட்பட, 24 மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 12 கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.


latest tamil news





நிவாரண முகாம்கள்


பல இடங்களில், மேடான பகுதிகளிலிருந்து சரிந்த பாறைகள் சாலைகளை ஆக்கிரமித்துள்ளதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில், ரயில் பாதைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால், மீட்பு நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பேரிடர் மீட்புப் படையினருடன், காவல் துறை, வருவாய்த் துறையினரும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
18-மே-202212:38:43 IST Report Abuse
அம்பி ஐயர் வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.. என்று சுதந்திரத்திற்கு முன்னரே பாடிச் சென்றான்... பாரதி.. ஆனால் சுதந்திரம் கிடைத்து எழுபத்தி ஐந்து ஆண்டுகள் ஆன போதும் இன்னமும் அது சாத்தியப்படவில்லை.. அனைத்து மாநிலங்களிலும் ஒரே கட்சி ஆட்சியைப் பிடிக்கும் போது தான் இது சாத்தியப்படுமோ?? மத்திய அரசு இதில் தீவிர முயற்சி எடுத்து நதிகளை ஒன்றிணைக்க வேண்டும்....
Rate this:
Cancel
18-மே-202212:16:24 IST Report Abuse
அப்புசாமி இன்னும் போகலியா?
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
18-மே-202210:00:01 IST Report Abuse
Krishnamurthy Venkatesan தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களை வறட்சியின் பிடியில் இருந்தும், வடக்கு, கிழக்கு மாநிலங்களில் ஏற்படும் வெள்ள சேதாரத்தை தவிர்க்கவும் நதிகள் இணைப்பு ஒன்றுதான் வழி. ராணுவம், வான் வெளி ஆராய்வு மற்றும் பல துறைகளுக்கு செலவிடப்படும் தொகையில் பத்தில் ஒரு பங்கை நதி நீர் இணைப்பிற்கு செலவழித்தால் நாடு சுபிட்சம் அடையும். இதனால் குடிநீர் பற்றாக்குறை நீங்கும், விவசாயம் செழிக்கும். வெள்ள சேதம் தவிர்க்கப்படும், உயிர் பலி ஏற்படாது. நாடு தன்னிறைவு அடையும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X