29 ஆண்டுக்கு பின் 4 பேர் கைது

Added : மே 17, 2022 | |
Advertisement
ஆமதாபாத்: மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த நான்கு பேரை, 29 ஆண்டுகளுக்கு பின், குஜராத் பயங்கரவாத தடுப்புப் படை போலீசார் கைது செய்தனர்.மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 1993ல் அடுத்தடுத்து பயங்கர குண்டுகள் வெடித்தன. இதில் 257 பேர் இறந்தனர்; 700க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இந்த வழக்கு தொடர்பாக மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ., தாக்கல் செய்த
Bombay Bomb Blast Case, Arrests, 4 Accused

ஆமதாபாத்: மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த நான்கு பேரை, 29 ஆண்டுகளுக்கு பின், குஜராத் பயங்கரவாத தடுப்புப் படை போலீசார் கைது செய்தனர்.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 1993ல் அடுத்தடுத்து பயங்கர குண்டுகள் வெடித்தன. இதில் 257 பேர் இறந்தனர்; 700க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இந்த வழக்கு தொடர்பாக மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ., தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், 190 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த நான்கு பேரை, குஜராத் பயங்கரவாத தடுப்பு படையினர், ஆமதாபாதின் சர்தார்நகரில் இன்று(மே 17) கைது செய்தனர். விசாரணையில் அவர்களின் பெயர்கள், அபுபக்கர், யூசுப் பட்கா, ஷோயிப் குரேஷி, சையத் குரேஷி என தெரிந்தது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X