வக்கீல்களுக்கு ரூ.8 லட்சம் அபராதம்

Added : மே 17, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி : நீதிபதிகள் எரிச்சலடையும் விதமான மனுவை தாக்கல் செய்த இரண்டு வழக்கறிஞர்களுக்கு, எட்டு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.போக்குவரத்து நெரிசல், காற்று மாசு மற்றும் கரியமில புகை உமிழ்வு போன்ற பிரச்னைகள் தொடர்பாக, இரண்டு வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு
SC, Supreme Court

புதுடில்லி : நீதிபதிகள் எரிச்சலடையும் விதமான மனுவை தாக்கல் செய்த இரண்டு வழக்கறிஞர்களுக்கு, எட்டு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

போக்குவரத்து நெரிசல், காற்று மாசு மற்றும் கரியமில புகை உமிழ்வு போன்ற பிரச்னைகள் தொடர்பாக, இரண்டு வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு முன், இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக உள்ள நீங்கள், இப்படியொரு மனுவை தாக்கல் செய்துள்ளீர்கள். இது தொடர்பாக, ஏற்கனவே உங்களை எச்சரித்தோம். ஆனால், நீங்கள் பொருட்படுத்தவில்லை. இது, பயிற்சி நீதிமன்றத்துக்கான போட்டி கிடையாது. உண்மையான நீதிமன்றம். தேசிய பசுமை தீர்ப்பாயம் உட்பட, பல்வேறு அமைப்புகள் ஏற்கனவே பிறப்பித்துள்ள உத்தரவுகளை பார்த்தும், இப்படியொரு மனுவை தாக்கல் செய்துள்ளீர்கள். உங்கள் இருவருக்கும், எட்டு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
18-மே-202215:41:56 IST Report Abuse
Lion Drsekar இதே போன்று மக்களுக்கு எதிராக செயல்படும் எந்த அமைப்புக்கும் சட்டத்தில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை அப்படி அலுவலகத்தை மூடிவிட்டு சொந்த தேவைகளுக்காக மக்களை இன்னலுக்கு உள்ளாக்கும் எந்த ஒரு அமைப்பாக இருந்தாலும் நடவடிக்கை எடுத்தால் மிகவும் பாராட்டலாம், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X