பணியாளர்களின் விருப்பத்திற்கு முன்னுரிமை தரும் இந்திய நிறுவனங்கள்: ஆய்வறிக்கையில் தகவல்

Updated : மே 17, 2022 | Added : மே 17, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி: பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் தங்களது பணியாளர்கள், பணியிடத்தை தேர்வு செய்வதில் முன்னுரிமையை அளிக்க தயாராக இருப்பதாகவும், அலுவலகம் வருவதை கட்டாயமாக்க விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளன.நவீன உலகிற்காக நிறுவனங்களின் எதிர்கால தயார்படுத்தல் என்ற தலைப்பில் தொழில்நுட்ப நிறுவனம் முதல் உற்பத்தி நிறுவனங்கள் வரை மிகப்பெரிய நிறுவனங்கள் முதல் ஸ்டார்ட் அப்,
employees, working models, office

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் தங்களது பணியாளர்கள், பணியிடத்தை தேர்வு செய்வதில் முன்னுரிமையை அளிக்க தயாராக இருப்பதாகவும், அலுவலகம் வருவதை கட்டாயமாக்க விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளன.

நவீன உலகிற்காக நிறுவனங்களின் எதிர்கால தயார்படுத்தல் என்ற தலைப்பில் தொழில்நுட்ப நிறுவனம் முதல் உற்பத்தி நிறுவனங்கள் வரை மிகப்பெரிய நிறுவனங்கள் முதல் ஸ்டார்ட் அப், சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள் வரை தகவல்களை சேகரித்து வேலைவாய்ப்பு நிறுவனமான லீம்லீஸ் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: சுமார் 76.78 சதவீத நிறுவனங்கள், பணியாளர்கள் பணி இடத்தை தேர்வு செய்வதற்கு வாய்ப்பை வழங்க தயாராக உள்ளன. 58.04 சதவீதம் நிறுவனங்கள், 2022ம் ஆண்டில் அனைத்து பணிகளும் மீண்டும் அலுவலகத்திற்கு திரும்புமென எண்ணுவதாக தெரிவித்துள்ளன. இதனுடன், 43.46 சதவீத மனிதவள மேம்பாட்டு தலைவர்கள், தங்களது பணியாளர்கள் மீண்டும் அலுவலகம் திரும்ப விருப்பம் தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.


latest tamil newsகோவிட் தொற்று பரவலால் வீட்டிலிருந்தே பணிபுரியும் சூழல் ஏறக்குறைய 2 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், இன்னும் சில தினங்களில் அலுவலகத்தை திறப்பதில் தீவிரமாக உள்ளன.

ஆய்வறிக்கையின்படி, 40.77 சதவீத நிறுவனங்கள், தொலைதூர சூழலில், பணியாளர்கள் திறன் மேலாண்மை மற்றும் தனிப்பட்ட சவால்களை திறம்பட கையாண்டதை கண்டறிந்துள்ளன. 18.45 சதவீதம் நிறுவனங்கள் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், அதே நிலையில் தொடர வாய்ப்பு அளித்துள்ளன. மேலும் 18.05 சதவீதம் நிறுவனங்கள், முழு நேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ அலுவலகத்தை திறக்கவும் திட்டமிட்டுள்ளன.

பொருளாதார சூழல் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், பணியிடங்கள் தவறான பாதைக்கு இட்டு செல்வதை தவிர்க்க பணியாளர்களை மீண்டும் அலுவலகத்திற்கு வரவேற்கவும், அதே நேரத்தில் வணிகத்தின் நீடித்த வளர்ச்சியை தக்கவைக்க பணியாளர்களின் விருப்பத்திற்கு முன்னுரிமையை கருத்தில் கொள்ளும் சூழலில் இருப்பதாக கூறியுள்ளன.

எப்படி இருப்பினும், இரு பணியிடங்களையும் சமமாக சிறந்த முறையில் கையாண்டு, உற்பத்தி திறனை நிர்ணயித்து, பணியாளர்கள் ஊக்குவிப்பதை பொறுத்தே நிறுவனத்தின் நீண்ட கால நலன் அமையும்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
18-மே-202209:29:25 IST Report Abuse
Girija சப்போர்ட் சேவை மேற்கத்திய நாடுகள் ஏன் இந்தியா சீனா போன்ற நாடுகளுக்கு அவுட்சோர்ஸ் செய்தது? காஸ்ட் ஐ கம்மி செய்ய, அப்போது இந்திய கம்பெனிகள் கொடுத்தது, அதே வேலையை அந்த நாட்டு குடிமகன் செய்தால் கொடுக்க வேண்டியதில் 25%. அதற்க்கே இங்கு ஐ டி ஊழியர்கள் போட்ட ஆட்டம் பந்தா கொஞ்சநஞ்சம் இல்லை. பிறகு பொருளாதார சரிவு வந்தது அவர்களின் பியூஸ் அய் பிடுங்கியது, மீண்டும் கொஞ்சம் எழுந்து வரும் நிலையில் கொரோனா. சப்போர்ட் சேவை சீனியும் நிறுவனங்கள், இதுவரை அவுட் சோர்ஸ் செய்யாத இந்திய நிறுவனங்கள் கோவட் காரணமாக ஒர்க் பிரேம் ஹோம் செய்தால் பந்தவான அலுவலக வாடகை, பர்னிட்சர், மின்சாரம், ஏ சி, பார்க்கிங், செக்யூரிட்டி, கான்டீன், ஓய்வு அறை, கேளிக்கை அறை, டி காபி இலவச காபி, பாத்ரூம், மெடிக்கல் நர்ஸ், ஊழியர்களுக்கு கம்பெனி பஸ், கால் டாக்ஸி, டிரான்ஸ்போர்ட் அலவன்ஸ், விடுமுறை, பெர்மிஷன் போன்ற தொல்லைகள் இல்லாமல் செலவு மிச்சமாகிறது என்று தெரிந்து கொன்டது. கொரோனாவிற்கு முன்பு 3 பேர் செய்த வேலையை கொரோனாவின்போது ஒருவர் மட்டும் செய்ய கூடியது என்பதும் வெளிப்பட்டது. பல சேவை நிறுவனங்கள் சொந்தமாக சிறிய அலுவலகத்தை சொந்தமாக வாங்கி, 90% சதவிகித ஊழியர்களை ஒர்க் பிரம் ஹோம் முறையில் சிறிது சம்பளத்தை உசத்தி புதிய ஒப்பந்தம் போட்டுள்ளனர். இதனால் ஆட்டோ மீட்டர் போல் லாகின் செய்தால் மட்டுமே சம்பள மீட்டர் ஓடும். ஒபி அடித்தால் சிஸ்டெம் காண்பித்து கொடுத்துவிடும். அதனால் பலரும் அலுவலகம் சென்று வேலை பார்க்க துடிக்கின்றனர்.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
18-மே-202207:20:03 IST Report Abuse
Natarajan Ramanathan HYBRID என்ற முறையில் வாரத்தில் மூன்று நாட்கள் அலுவலகம் சென்றும் இரண்டு நாட்கள் வீட்டில் இருந்தும் பணிசெய்யும் வசதியை இப்போது பல நிறுவனங்கள் வழங்குகின்றன.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
17-மே-202223:01:57 IST Report Abuse
Ramesh Sargam உட்பத்தி/வருமானம் பாதிக்காமல் இருந்தால் இப்பொழுதுள்ள work from home முறை தொடரலாம். ஒருவேளை பணியாளர்கள் கட்டாயம் அலுவலகம் வந்துதான் பணிசெய்யவேண்டும், அப்படி பணிசெய்தால்தான் நிறுவனங்கள் முன்னேற முடியும், வருமானம் பெருகும் என்றால், அதுபோன்ற அலுவலகங்களில் பணியாளர்கள் அலுவலகம் சென்று பணிபுரிவது சிறந்தது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X