அமெரிக்க பல்கலையில் 'சீட்' பூ விற்கும் பெண் அசத்தல்

Updated : மே 17, 2022 | Added : மே 17, 2022 | கருத்துகள் (19) | |
Advertisement
மும்பை : மும்பையில் பூ வியாபாரம் செய்து வந்த மாணவிக்கு, அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலையில், பிஎச்.டி., எனப்படும் ஆராய்ச்சி படிப்பு படிக்க இடம் கிடைத்துள்ளது.மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்தவர் சரிதா மாலி, ௨௮. இவரது தந்தை, சாலையோரத்தில் பூ வியாபாரம் செய்து வருகிறார்.பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே, பூக்களை மாலையாக கட்டி தந்தையுடன் சென்று

மும்பை : மும்பையில் பூ வியாபாரம் செய்து வந்த மாணவிக்கு, அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலையில், பிஎச்.டி., எனப்படும் ஆராய்ச்சி படிப்பு படிக்க இடம் கிடைத்துள்ளது.



latest tamil news



மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்தவர் சரிதா மாலி, ௨௮. இவரது தந்தை, சாலையோரத்தில் பூ வியாபாரம் செய்து வருகிறார்.பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே, பூக்களை மாலையாக கட்டி தந்தையுடன் சென்று வியாபாரம் செய்வது சரிதாவின் வேலையாக இருந்து வந்தது.

டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில், ஹிந்தியில் முதுகலை பட்டம் பெற்ற சரிதா, அதில் எம்.பில்., மற்றும் ஆராய்ச்சி படிப்பும் படித்து முடித்து உள்ளார். இந்நிலையில், சரிதா மாலிக்கு அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலையில், பிஎச்.டி., படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.இது பற்றி, சரிதா மாலி கூறியதாவது:என் வாழ்க்கையில், கஷ்டங்களை தான் அதிகம் சந்தித்துள்ளேன்.


latest tamil news


சிறு வயதிலிருந்தே பூக்களுடன் தான் வாழ்ந்து வருகிறேன். பள்ளி மாணவியாக இருந்த போதிலிருந்து, தந்தைக்கு உதவியாக பூ வியாபாரம் செய்து வந்தேன்.நேரு பல்கலையில் பட்டப்படிப்பு சேர்ந்த பின், விடுமுறையில் வீட்டுக்கு வரும் போது, பூ வியாபாரத்தை தொடர்ந்தேன். எனக்கு இரண்டு மூத்த சகோதரிகள், இரண்டு தம்பிகள் உள்ளனர். என் படிப்புக்கு தந்தை எந்த தடையும் விதிக்கவில்லை.

இப்போது, அமெரிக்காவில் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அமெரிக்காவில் படித்து முடித்த பின், குடும்ப முன்னேற்றத்துக்காக பாடுபடுவேன்.இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement


வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
18-மே-202215:07:38 IST Report Abuse
Rafi தந்தையின் உழைப்பு வீணாகாமல் கஷ்டமான சூழ்நிலையிலும் குறிக்கோளை அடைந்துள்ளதிற்கு வாழ்த்துக்கள் சகோதரி, கலைஞருக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும், அவரின் சுயநலமற்ற தொலைநோக்கு பார்வையின் விளைவும். அதனால் ஆட்சியாளர்களின் இந்தி திணிப்பு எதிப்பு போராட்டத்தின் விளைவே இந்த நாட்டில் ஆங்கிலம் தொடர்பு நிலையாக இருந்து இன்று வெளிநாடுகளும் நம்மை அரவணைக்க துணையாக இருக்கிறது. நன்றி...
Rate this:
Cancel
18-மே-202212:14:18 IST Report Abuse
அப்புசாமி அமெரிக்கா சென்று அங்கேயும் இந்திதான் படிக்கப் போறாரு. ஆங்காங்கே தமிழ் இருக்கை வெக்கிற மாதிரி, இந்தி இருக்கையும் வெச்சிருக்காங்க. அங்கே இருப்பவர் வழிகாட்டுதலில் இந்தியில் பி.ஹெச்.டி செய்யப்போறாரு. மத்தபடி விசேஷமா ஒண்ணும் இல்லை. நன்றாகப் படித்து அங்கே ஒரு இந்தி டீச்சர் வேலை கிடைச்சாலும் நிறைய சம்பாரிச்சு வாழலாம். இங்கே என்ன படிச்சாலும் பானிபூரிதான்.
Rate this:
TamilArasan - Nellai,இந்தியா
18-மே-202213:47:39 IST Report Abuse
TamilArasanநல்லா கதறுடா 200 ருபாய் கொத்தடிமை......
Rate this:
18-மே-202214:28:10 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்"இங்கே என்ன படிச்சாலும் பானிபூரிதான்." .....இந்தியாவில் என்ன படித்தாலும் அப்படி படித்தவர்கள் பானிபூரி தான் விற்கிறார்களா ???? .......... பானிபூரி விற்றால் கூட அதில் என்ன தவறு ???? ...... உனது எஜமானர்களை போல ஓங்கொளில் இருந்து வந்து தமிழினத்தை நம்பிக்கை துரோகம் செய்வதை விடவா இழிவானது ????...
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
18-மே-202212:00:58 IST Report Abuse
Tamilan கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை. அமெரிக்கர்களுக்கு பூவைப்பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது. எம்.பில்., மற்றும் ஆராய்ச்சி படிப்பும் படித்து முடித்து உள்ளார். அதனால் கிடைத்துள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X