பண்ணை குட்டை அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு

Added : மே 17, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் பண்ணை குட்டைகள் அமைக்க சம்பந்தப்பட்ட துறையினரை விவசாயிகள் அணுகலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி வெளியிட்ட செய்திகுறிப்பு:மழைநீர் சேமிப்பிற்கும், வழிந்தோடும் மழை நீரினால் மண் அரிப்பை தடுக்கவும், மண் வள பாதுகாப்பிற்கும், மிக சிறந்த மற்றும் நிரந்தரமான தீர்வு வயல்தோறும் பண்ணைக்குட்டை

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் பண்ணை குட்டைகள் அமைக்க சம்பந்தப்பட்ட துறையினரை விவசாயிகள் அணுகலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி வெளியிட்ட செய்திகுறிப்பு:மழைநீர் சேமிப்பிற்கும், வழிந்தோடும் மழை நீரினால் மண் அரிப்பை தடுக்கவும், மண் வள பாதுகாப்பிற்கும், மிக சிறந்த மற்றும் நிரந்தரமான தீர்வு வயல்தோறும் பண்ணைக்குட்டை அமைப்பதாகும்.அதிக மழை பெறும் காலங்களில் வெள்ளமும், மண் அரிமானமும், மண் அரிப்பால், மண்வள பாதிப்பும் தவிர்க்க முடியாத ஒன்றாகிறது.பண்ணைக்குட்டை அமைப்பது எப்படி:ஒரு ஏக்கர் நிலத்தில் 1 சென்ட் பரப்பளவில், 8 க்கு 5 மீட்டர் அல்லது 10 க்கு 4 மீட்டர், 1.5 மீட்டர் ஆழத்திற்கு குழி வெட்ட வேண்டும்.குறைந்தது ஒரு ஏக்கரில் ஒரு சென்ட் பரப்பளவு அதாவது 1 சதவிகிதத்திலிருந்து அதிகபட்சமாக 10 சதவிகித பரப்பளவில் 10 சென்டில் பண்ணைக்குட்டை அமைத்து பயன்பெறலாம்.

ஒரு சென்ட் பரப்பளவில் அமைக்கப்படும் பண்ணைக் குட்டையின் கொள்ளளவு 60 கன மீட்டர் அதாவது 60,000 லிட்டர் ஆகும்.குறைந்த செலவில் அமைக்க ஜே.சி.பி., அல்லது பொக்லைன் ஆகிய நவீன இயந்திரங்களை பயன்படுத்தலாம். இதை அமைக்க 5 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்.பண்ணைக் குட்டையின் அளவை 10 சென்டுக்கு மேல் 50 சென்ட் பரப்பளவில் அமைத்து மீன் குட்டை அமைத்து மீன் வளர்ப்பு செய்யலாம்.

பண்ணைக்குட்டையினை, கரும்பு, வாழை, முந்திரி, தென்னை, பலா தோப்புகளிலும், மணிலா, சூரியகாந்தி, கம்பு, மக்காச்சோளம், பருத்தி, மிளகாய் போன்ற பயிர்களை சாகுபடி செய்யும் நிலத்திலும் வெட்டலாம்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல வகையான மண் உள்ளது.அனைத்து பகுதியிலும் விவசாயிகள் பண்ணைக் குட்டை அமைக்க திட்டங்கள் உள்ளன. உங்கள் பகுதி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் மேலும் விவரம் பெறலாம்இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X