மதுரவாயல் : போதையில் தகராறு செய்த கணவரை கொலை செய்து விட்டு, தற்கொலை நாடகமாடிய மனைவி, மகள் மற்றும் மருமகன் ஆகியோரை, மதுரவாயில் போலீசார் கைது செய்தனர்.
மதுரவாயல், ஆலப்பாக்கம், கோவிந்தப்பன் நாயக்கர் தெருவை சேர்ந்தவர், ராஜேந்திரன், 59; பெயின்டர். மதுவுக்கு அடிமையான ராஜேந்திரன், வீட்டில் தினமும் போதையில் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, குடிபோதையில் வீட்டிற்கு வந்தவர், தகராறு செய்து விட்டு, கயிற்றால் கழுத்தை இறுக்கி தற்கொலை செய்து கொண்டதாக, அவரது மனைவி, மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மதுரவாயல் போலீசார், ராஜேந்திரன் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், கழுத்து இறுக்கப்பட்டு ராஜேந்திரன் இறந்ததாக வந்த தகவலையடுத்து, அவரது மனைவி மற்றும் மருமகன் ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ராஜேந்திரன் குடிபோதையில் தகராறு செய்ததால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததை, இருவரும் ஒப்பு கொண்டனர். இதற்கு உடந்தையாக இருந்த மகள், ராஜேஸ்வரி உள்ளிட்ட மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE