'பூஸ்டர் டோஸ்' இலவசமில்லை!: பொது சுகாதாரத் துறை அறிவிப்பு

Updated : மே 18, 2022 | Added : மே 18, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
சென்னை: 'தமிழகத்தில் 18 முதல் 59 வயது உள்ளவர்களுக்கு, அரசு மருத்துவமனைகளில், 'பூஸ்டர் டோஸ்' தடுப்பூசி போடப்படாது' என, பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம், அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:மத்திய அரசு வழிகாட்டுதல்படி, 2021 ஜன., 16 முதல், 'கோவாக்சின், கோவிஷீல்டு' தடுப்பூசிகள் தமிழகத்தில்
Corona Vaccine, Booster Dose, Vaccine

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: 'தமிழகத்தில் 18 முதல் 59 வயது உள்ளவர்களுக்கு, அரசு மருத்துவமனைகளில், 'பூஸ்டர் டோஸ்' தடுப்பூசி போடப்படாது' என, பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம், அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:மத்திய அரசு வழிகாட்டுதல்படி, 2021 ஜன., 16 முதல், 'கோவாக்சின், கோவிஷீல்டு' தடுப்பூசிகள் தமிழகத்தில் போடப்படுகின்றன. அதன் தொடர்ச்சியாக, 'கோர்பிவேக்ஸ் மற்றும் ஸ்புட்னிக் - வி' தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்தன.

தற்போது, 'கோவோவேக்ஸ்' தடுப்பு மருந்து, தேசிய கொரோனா தடுப்பூசி திட்டத்தில் இணைக்கப்பட்டு உள்ளது. அதன்படி, 12 முதல் 17 வயது உடையவர்கள், தனியார் மருத்துவமனைகளில், 'கோவோவேக்ஸ்' தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம். அதேபோன்று, 12 முதல் 17 வயது உடையவர்கள், முதல் மற்றும் இரண்டாம் தவணையாக, 'கோர்பிவேக்ஸ்' தடுப்பூசியை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் செலுத்திக் கொள்ளலாம்.


latest tamil newsமேலும், 15 முதல் 17 வயது உடையவர்கள், கோவாக்சின் தடுப்பூசியை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் போட்டுக் கொள்ளலாம். முதல் மற்றும் இரண்டாம் தவணையாக, கோவாக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடலாம். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், 60 வயதுக்கு மேற் பட்டோருக்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக போட்டு கொள்ளலாம்.

'ஸ்புட்னிக் - வி' தடுப்பூசியை, 18 வயதுக்கு மேற்பட்டோர், தனியார் மருத்துவமனைகளில் போட்டு கொள்ளலாம். 18 - 59 வயதுக்கு உட்பட்டோருக்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி, அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படாது. அதேநேரம், தனியார் மருத்துவமனைகளில் போட்டு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
18-மே-202214:59:49 IST Report Abuse
jayvee இனி கழக மருத்துவமனைகளும் சந்தோஷப்படலாம் .
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
18-மே-202213:55:17 IST Report Abuse
Ramesh Sargam 'பூஸ்டர் டோஸ்' அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் இலவசம். நான் இலவசம் என்று கூறியது அமெரிக்கா பிரஜைகளுக்கு மட்டுமல்ல, வெளி நாட்டவர்களுக்கு கூட இலவசம்தான். நான் ஜனவரி மாதத்தில் அமெரிக்காவில் அங்கு இருந்தபோது முதல் பூஸ்டர் டோசை இலவசமாக போட்டுக் கொண்டேன். ஆனால் வளர்ந்துவரும் இந்திய நாட்டில் ஏன் மக்களின் நலன் மீது அக்கறை காட்டுவதில்லை. இதுபோன்ற உயிர் காக்கும் மருந்துகளை அரசு இலவசமாக கொடுக்க வேண்டும். தேர்தலுக்கு முன் கொடுக்கும் இலவசங்கள் முற்றிலும் நிறுத்தப்படவேண்டும்.
Rate this:
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
18-மே-202216:16:21 IST Report Abuse
sankareverybody in america paying taxes in india only 2 crorer out of 130 crores paying taxes...
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
18-மே-202213:25:40 IST Report Abuse
mindum vasantham பூஸ்டர் டோஸ் தேவையற்றது நோயின் வீர்யம் குறைந்து விட்டது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X