சிவகாசி : வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளம் அகழாராய்ச்சியில், மீண்டும் யானை தந்தத்தால் ஆன தொங்கட்டான் கிடைத்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. சுடுமண்ணால் ஆன முழுமையான பானைகள், பொம்மைகள், அகல் விளக்கு, புகை பிடிப்பான் கருவி, விலங்குகளின் எலும்புகள், டெரகோட்டா எனப்படும் சுட்ட களிமண்ணால் ஆன குழந்தைகள் விளையாடும் குவளை கிடைத்தது.
இதற்கிடையே, மூன்று நாட்களுக்கு முன், ஏழாவது குழியில் யானை தந்தத்தால் ஆன அணி கலன் கிடைத்த நிலையில், நேற்று அதே குழியில் கூடுதலாக, 1 அடி தோண்டிய போது மீண்டும் யானை தந்தத்தால் ஆன தொங்கட்டான் கிடைத்துள்ளது.
அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில், ''ஆழம் அதிகரிக்கும் போதும், புதிய குழி தோண்டப்படும் போதும் மேலும் பல பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE