இலுப்பையூரில் 10 ம் நூற்றாண்டு முற்கால பாண்டியர் நடுகல் கண்டுபிடிப்பு

Added : மே 18, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
திருச்சுழி : விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே இலுப்பையூரில் கி.பி., 9, 10 ம் நுாற்றாண்டு முற்கால பாண்டியர் நடுகல் முதல்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.வரலாற்றுத்துறை பேராசிரியர் விஜயராகவன் தலைமையில் மாணவர்கள் ராஜபாண்டி, சரத்ராம் இப்பகுதியில் ஆய்வு செய்த போது இக்கல் கண்டுபிடிக்கப்பட்டது.பேராசிரியர் விஜயராகவன் கூறியதாவது: இக்கல் 6 அடி உயரம், இரண்டரை அடி அகலம்
இலுப்பையூரில் 10 ம் நூற்றாண்டு முற்கால பாண்டியர் நடுகல் கண்டுபிடிப்பு


திருச்சுழி : விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே இலுப்பையூரில் கி.பி., 9, 10 ம் நுாற்றாண்டு முற்கால பாண்டியர் நடுகல் முதல்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.வரலாற்றுத்துறை பேராசிரியர் விஜயராகவன் தலைமையில் மாணவர்கள் ராஜபாண்டி, சரத்ராம் இப்பகுதியில் ஆய்வு செய்த போது இக்கல் கண்டுபிடிக்கப்பட்டது.

பேராசிரியர் விஜயராகவன் கூறியதாவது: இக்கல் 6 அடி உயரம், இரண்டரை அடி அகலம் கொண்டது. கல் மேல் பகுதியில் 11 வரிகள் கொண்ட, வட்டெழுத்து கல்வெட்டு காணப்படுகிறது. ஓய்வு பெற்ற தொல்லியல் துறை இயக்குனர் சாந்தலிங்கம் உதவியுடன் வட்டெழுத்து படிக்கப்பட்டது. கல்வெட்டில் இடது பாதி முற்றிலும் சிதைந்து, வலது பாதியில் மட்டும் எழுத்துக்கள் உள்ளன. இரு ஊர்களுக்கு இடையே ஏற்பட்ட பூசலில் புல்லன் சாத்தன் என்ற வீரர் ஒரு ஊரை வென்று, போரில் உயிர் நீத்தார் என கல்வெட்டு கூறுகிறது.

இதுவரை பாண்டியநாட்டில் கி.பி., 10 ம் நூற்றாண்டை சேர்ந்த வட்டெழுத்து நடுகற்கள் 2 மட்டுமே கிடைத்துள்ளன. அதில் ஒன்று தற்போது கண்டறியப்பட்ட இலுப்பையூர் கல்வெட்டு. மற்றொன்று இந்தஊருக்கு தெற்கில் உள்ள ராமநாதபுரம் மாவட்டம் நீராவி அருகிலுள்ள கரிசல்குளத்தில் கண்டறியப்பட்டது. அந்த நடுகல் பசுக்கூட்டங்களைக் கவர்ந்து சென்ற போது எதிர்த்து போரிட்டு உயிர் நீத்த வீரனுக்கு நடப்பட்ட நடுகல் ஆகும்.விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை ராஜபாளையம் அருகில் முதுகுடியில் பிற்கால பாண்டியரின் நடுக்கல் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
18-மே-202208:19:58 IST Report Abuse
Fastrack திராவிட ஆட்சியில் தான் பழைய வரலாறையெல்லாம் வெளிச்சத்துக்கு கொண்டு வராங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X