மீட்கப்பட்ட கோவில் சொத்து விபரப் புத்தகம் வெளியீடு

Updated : மே 18, 2022 | Added : மே 18, 2022 | கருத்துகள் (33) | |
Advertisement
சென்னை : ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட கோவில் சொத்துக்கள் விபரம் அடங்கிய புத்தகத்தை, முதல்வர் ஸ்டாலின், நேற்று வெளியிட்டார். முதல் பிரதியை, அமைச்சர் சேகர்பாபு பெற்றுக் கொண்டார். முதன்முதலாக, சென்னை வடபழநி ஆண்டவர் கோவிலுக்கு சொந்தமான, 250 கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்கிரமிப்பு சொத்துக்கள்,2021 ஜூன் 6ம் தேதி மீட்கப்பட்டன.அதைத்

சென்னை : ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட கோவில் சொத்துக்கள் விபரம் அடங்கிய புத்தகத்தை, முதல்வர் ஸ்டாலின், நேற்று வெளியிட்டார். முதல் பிரதியை, அமைச்சர் சேகர்பாபு பெற்றுக் கொண்டார். முதன்முதலாக, சென்னை வடபழநி ஆண்டவர் கோவிலுக்கு சொந்தமான, 250 கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்கிரமிப்பு சொத்துக்கள்,2021 ஜூன் 6ம் தேதி மீட்கப்பட்டன.latest tamil newsஅதைத் தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில், கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டு வருகின்றன.மீட்கப்பட்ட சொத்து விபரங்கள் அனைத்தையும் தொகுத்து, அழியாத ஆவணமாக, அனைவரும் அறிந்து கொள்வதற்காக, இப்புத்தகம் வெளியிடப்பட்டு உள்ளது.இதில், ௨௦௨௧ மே 7 முதல், 2022 மார்ச் 31 வரை, மீட்கப்பட்ட கோவில் சொத்துக்களின் விபரம், கோவில் நிலங்கள் அளவீடு செய்யும் பணிகள், மீட்கப்பட்ட நிலம், மனை, கட்டடம், குளம் விபரங்கள் தொகுக்கப்பட்டு உள்ளன.


latest tamil newsஎதிர்காலத்தில் கோவில் சொத்துக்களை பாதுகாக்க, இப்புத்தகம் அடிப்படை ஆதாரமாக விளங்கும். மீட்கப்பட்ட சொத்துக்கள், 'ரோவர்' கருவிகளால் அளவீடு செய்யப்பட்டு, எச்.ஆர்.சி.இ., என்ற பெயர் பொறிக்கப்பட்ட கற்கள் நடப்பட்டு, வேலி அமைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன.நிகழ்ச்சியில், அறநிலையத் துறை முதன்மை செயலர் சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன், மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
18-மே-202218:17:20 IST Report Abuse
r.sundaram யாரிடமிருந்து மீட்கப்பட்டது அவர் எந்த கட்சிக்காரர் என்ற தகவலும் இருந்தால் இந்த புத்தகத்தின் மதிப்பு உணரப்படும். இல்லையேல் இந்த புத்தகத்துக்கு அவசியமே இல்லை. அரசு அதிகாரிகள் தங்கள் கடமையை செய்து விட்டு அதற்க்கு அரசு செலவிலேயே விளம்பர புத்தகமா? வேடிக்கை.
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
18-மே-202216:13:51 IST Report Abuse
mindum vasantham ஹிந்து நம்பிக்கையை ஒடுக்க வேண்டும் என்று ஓபன் ஆக பிரச்சாரம் செய்யும் திமுக கட்டுப்பாட்டில் எப்பிடி கோயில்கள்
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
18-மே-202216:13:44 IST Report Abuse
சீனி ஆனாலும், எம்பெருமான் நாராயணனன் புகழ் பாடும் ஜீயரை, முதல்வர் புகழ் பாடச்சொல்லி அவரு கமண்டலத்துல சிக்கி சின்னாபின்னமாயிட்டாரு இந்த சினேக்பாபு.... அறயநிலைத்துறை, பழனி முருகனுக்கே மொட்டை போடாம இருந்தால் சரி... ஹாஹாஹா.... திமுகவினர் இந்த முறை வெற்றிக்கு, மக்களுக்கு நல்லது செய்ய்யவில்லை என்றால் கூட பரவாயில்லை,திகவோட கூட்டணி அமைத்து இந்து கடவுள்களுக்கு துரோகம் இழைக்காமல் இருந்தாலே போதும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X