கோவை:மதுக்கரை மார்க்கெட் பகுதியில் உள்ள பேன்ஸி ஸ்டோரில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் எஸ்.எஸ்.,பேன்ஸி ஸ்டோர் உள்ளது. கடையின் உரிமையாளர் போடிபாளையத்தை சேர்ந்த தினேஷ், 34 நேற்றிரவு கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றார். இரவு, 10:45 மணியளவில் கடையில் தீப்பிடித்துள்ளது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். மதுக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement