பா.ஜ., புதிய நிர்வாகிகளுக்கு ஆர்.எஸ்.எஸ்., பயிற்சி கட்டாயம்

Added : மே 18, 2022 | |
Advertisement
சென்னை : 'பா.ஜ., மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ்., அளிக்கும் ஏழு நாட்கள் பயிற்சியை கட்டாயம் பெற வேண்டும்' என, பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச்செயலர் பி.எல்.சந்தோஷ் அறிவுறுத்திஉள்ளார்.தமிழக பா.ஜ., தலைவராக அண்ணாமலை, 2021 ஜூன் 8-ம் தேதி நியமிக்கப்பட்டார். நீண்ட இழுபறிக்கு பின், ௬-ம் தேதி, புதிய மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். பா.ஜ., என்பது


சென்னை : 'பா.ஜ., மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ்., அளிக்கும் ஏழு நாட்கள் பயிற்சியை கட்டாயம் பெற வேண்டும்' என, பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச்செயலர் பி.எல்.சந்தோஷ் அறிவுறுத்திஉள்ளார்.தமிழக பா.ஜ., தலைவராக அண்ணாமலை, 2021 ஜூன் 8-ம் தேதி நியமிக்கப்பட்டார்.

நீண்ட இழுபறிக்கு பின், ௬-ம் தேதி, புதிய மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். பா.ஜ., என்பது ஆர்.எஸ்.எஸ்., கொள்கைகளின் அடிப்படையில் இயங்கும் கட்சி. இப்போது, ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தம் பற்றி அறியாத பலரும் கட்சி பொறுப்புக்கு வந்திருப்பதால், அவர்கள் அனைவரும், ஏழு நாட்கள் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ்., ஆரம்ப நிலை பயிற்சி முகாமை முடிக்க வேண்டும் என, பா.ஜ., தேசிய அமைப்பு செயலர் சந்தோஷ் அறிவுறுத்தி உள்ளார்.

இதில், ஆரம்ப நிலை பயிற்சி முகாம் மாவட்ட அளவிலும், முதலாம், இரண்டாம் ஆண்டு பயிற்சி முகாம்கள் மாநில அளவிலும், மூன்றாம் ஆண்டு பயிற்சி முகாம், மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரிலும் நடக்கும். 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தனியாக முகாம்கள் நடைபெறும்.ஆர்.எஸ்.எஸ்.,சில் இருப்பவர்கள், இந்த நான்கு பயிற்சி முகாம்களையும் முடிப்பதை, தங்களின் வாழ்நாள் லட்சியமாக கொண்டிருப்பர். ஆனால், முகாம் முடியும் வரை யாரும், எதற்காகவும் வெளியே வர முடியாது என்பதால், பா.ஜ., நிர்வாகிகள் பலர், இந்த முகாம்களுக்கு செல்வதில்லை.

ஆனாலும், 'கட்சியின் சித்தாந்தத்தை தெரிந்து கொள்ளவும், கட்டுப்பாடு, ஒழுக்கம், திட்டமிடல், நிர்வாக திறமை போன்ற ஆளுமை திறனை வளர்த்துக் கொள்ளவும், பா.ஜ., நிர்வாகிகள் ஆரம்பநிலை பயிற்சி முகாமை முடிக்க வேண்டும். 'மாநில நிர்வாகிகள், அணிகள், பிரிவுகளின் மாநிலத் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், ஏழு நாட்கள் பயிற்சி முகாமில் கட்டாயம் பங்கேற்க வேண்டும்' என, சந்தோஷ் அறிவுறுத்தியிருப்பதாக, அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X