கோவை:''2024ல் நடக்கும் லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் வெற்றி பெற பணப்பட்டுவாடா செய்ய இப்போதே தி.மு.க., திட்டம் தீட்டி பட்டியல் போட்டு வருகிறது,'' என, வேலுார் இப்ராஹிம் கூறினார்.பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம், கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் இல்லத்தரசிகளுக்கு 1,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால் செயல்படுத்த மறுக்கிறது.
கூட்டுறவு வங்கிகளில் நகை தள்ளுபடி என்று சொல்லி குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மட்டும் நகை தள்ளுபடியை வழங்கிவிட்டு மற்றவர்களுக்கு ஏமாற்றத்தை மட்டுமே வழங்கியுள்ளது.தி.மு.க.,வில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மையான அமைச்சர்களின் மகன்கள் எம்.பி.க்களாக உள்ளனர். அதே போல் உறவினர்கள் மாநில அரசில் முக்கிய பதவிகளில் அங்கம் வகிக்கின்றனர்.
தி.மு.க.,வின் அடிப்படையே வாரிசு அரசியல். அது முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்திலிருந்து தற்போதும் தொடர்ந்து வருகிறது. இதற்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.௨௦௨௪ல் நடக்கும் லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் வெற்றி பெற பணப்பட்டுவாடா செய்ய இப்போதே தி.மு.க., திட்டம் தீட்டி பட்டியல் போட்டு வருகிறது. கொங்கு மண்டலத்தில் உள்ள திருப்பூர், கோவை, நீலகிரி, பொள்ளாச்சி ஆகிய நான்கு லோக்சபா தொகுதிகளிலும் பா.ஜ., வெற்றிபெறும். அதற்கான அடிப்படை கட்டமைப்பு பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறோம்.இவ்வாறு வேலுார் இப்ராஹிம் கூறினார்.