அண்ணாமலைக்கு பாராட்டு: நெடுமாறன் மீது பாயும் தி.மு.க.,

Updated : மே 18, 2022 | Added : மே 18, 2022 | கருத்துகள் (73) | |
Advertisement
சென்னை:முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை பாராட்டியதால், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறனை, தி.மு.க.,வினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தமிழகத்தை ஆளும் தி.மு.க.,வினர், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வை விட, பா.ஜ.,வையும், அதன் தலைவர் அண்ணாமலையையும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். சென்னையில் நெடுமாறன்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை:முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை பாராட்டியதால், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறனை, தி.மு.க.,வினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.latest tamil newsதமிழகத்தை ஆளும் தி.மு.க.,வினர், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வை விட, பா.ஜ.,வையும், அதன் தலைவர் அண்ணாமலையையும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். சென்னையில் நெடுமாறன், ஈழத் தமிழ் கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் ஏற்பாடு செய்த, முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வில் அண்ணாமலை பங்கேற்றார். இதனால், தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளும் புறக்கணித்தன.

இந்நிகழ்ச்சியில் பேசிய நெடுமாறன், 'அண்ணாமலையை ஐ.பி.எஸ்., என்று கேள்விப்பட்டேன். ஆனால், ஐ.எப்.எஸ்., அதிகாரியை போல, இலங்கை பிரச்னையை பற்றி தெளிவான புரிதலுடன்பேசினார். 'தமிழர், சிங்களர் வேறுபாடு இல்லாமல், இலங்கை மக்களுக்கு பிரதமர் மோடி அள்ளி கொடுத்திருக்கிறார். மோடி ராஜதந்திரம் மிக்க தலைவர். பொறுமையும், பெருந்தன்மையும் அண்ணாமலைக்கு அதிகம் உள்ளது' என்று பாராட்டினார்.


latest tamil news

இதனால், கடுப்பான தி.மு.க.,வினரும், அக்கட்சியின் ஆதரவாளர்களும் நெடுமாறனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ராஜ்யசபா தி.மு.க., - எம்,பி.,யும், அக்கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவின் செயலருமான அப்துல்லா, 'தமிழ் தேசியம் என்பது, ஆர்.எஸ்.எஸ்., உருவாக்கிய செல்லக் குழந்தை என்பது உறுதியாகி விட்டது' என்று விமர்சித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
18-மே-202219:38:39 IST Report Abuse
Dhurvesh எல்ஐசியின் அரசுப் பங்கை அரசே விற்பது என்பது விவசாயி தனது விதைநெல்லை விற்பதற்கு சமமாகும்.. இது தனியார்மயத்தின் முதல்படி என்பதை கட்ரையாளர் சுவாமிநாதன் அவர்கள் சாமான்ய மக்களுக்கும் புரியும் வகையில் தெளிவுப்படுத்தி உள்ளார். மத்திய அரசு பாெதுத்துறைளை கார்ப்பரேட்டுகளுக்கு பங்கு சந்தை மூலம் தனியாருக்கு தாரை வார்க்கும் இப்படிப்பட்ட பாெருளாதாரப் பாதையை கைவிடா விடில் இலங்கை நாட்டை விட இந்தியா கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகி விடுமாே என்ற எண்ணம் அனைவருக்கும் தேன்றுவது இயல்பு தானே.
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
21-மே-202200:17:04 IST Report Abuse
கல்யாணராமன் சு.... 3.5% பங்குகள் மட்டுமே விற்கப்பட்டு 96.5% பங்குகள் அரசு வசம் இருக்கும்போது, எப்படி இது மொத்தமாக தனியார் மாயம் என்று சொல்லமுடியும் ? தமிழ்நாட்டில் உல்லாச 90% பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன ? அவற்றில் கட்டு கட்டாக சம்பளம் வாங்கிக்கொண்டு பெஞ்சை தேய்க்கும் அனைவருக்கும் மக்களின் வரிப்பணம்தான் செலவிடப்படுகிறது என்பதாவது தெரியுமா ??..........
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
18-மே-202219:30:20 IST Report Abuse
Dhurvesh எவ்வித காரணமும் கூறாமல் தான் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். எச்.ராஜா இன்று பழனியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்று கொண்டிருந்தபோது, திண்டுக்கல் எஸ்.பியால் தான் கைது செய்து செய்யப்பட்டதாக அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
21-மே-202200:19:17 IST Report Abuse
கல்யாணராமன் சு.அவர் கைது செய்யப்பட்டார் என்ற செய்தியும், அவர் எதற்காக கைது செய்யப்பட்டார் என்ற காரணம் கொண்ட செய்தியும் ஒன்றா ? காரணம் சொல்லப்படவில்லை என்பதுதானே உண்மை ? என்னே புரிதல்...
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
18-மே-202218:07:17 IST Report Abuse
Soumya அண்ணாமலை பெயரை கேட்டாலே விடியலுக்கு வயித்த கலக்குதாம் ஹீஹீஹீ
Rate this:
18-மே-202220:03:46 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்எவ்வித காரணமும் கூறாமல் கைது செய்யப்பட்டுள்ளேன்: எச்.ராஜா , SWEET எடு கொண்டாடு / நாளை அண்ணாமலைக்கு இந்த நிலை வரலாம்...
Rate this:
18-மே-202220:04:37 IST Report Abuse
தமிழ்நாட்டுபற்றாளன்.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X