வாரணாசியில் நகரத்தாரின் நிலம் ஆக்கிரமிப்பு: 24 மணி நேரத்தில் மீட்டு தந்த பா.ஜ., அரசு

Updated : மே 18, 2022 | Added : மே 18, 2022 | கருத்துகள் (50) | |
Advertisement
சென்னை:வாரணாசியில், 240 கோடி ரூபாய் மதிப்புள்ள, நாட்டுக்கோட்டை நகரத்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை, 24 மணி நேரத்தில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு மீட்டுக் கொடுத்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில், நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தினருக்கு சொந்தமான சத்திரம் உள்ளது. காசி விஸ்வநாதர் கோவில் பூஜைக்கு தேவையான பூக்களை வழங்குவதற்காக, கங்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை:வாரணாசியில், 240 கோடி ரூபாய் மதிப்புள்ள, நாட்டுக்கோட்டை நகரத்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை, 24 மணி நேரத்தில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு மீட்டுக் கொடுத்துள்ளது.latest tamil news


உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில், நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தினருக்கு சொந்தமான சத்திரம் உள்ளது. காசி விஸ்வநாதர் கோவில் பூஜைக்கு தேவையான பூக்களை வழங்குவதற்காக, கங்கை கரையில், 63 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் நந்தவனத்தையும், நகரத்தார் அறக்கட்டளை அமைத்துள்ளது.

கடந்த, 1813-ல் வாங்கப்பட்ட இந்த நிலத்தை, சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் ஆக்கிரமித்திருந்தனர். இது தொடர்பாக புகார் கொடுத்த 24 மணி நேரத்தில், அம்மாநில அரசு, நிலத்தை மீட்டு கொடுத்துள்ளது.நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திர மேலாண்மை கமிட்டி நிர்வாகி முத்துக்குமார் கூறியதாவது:

வாரணாசி வரும் தமிழக பக்தர்கள் தங்குவதற்கான சத்திரம், காசி விஸ்வநாதர் கோவில் அபிஷேகத்திற்கு பசும்பால் வழங்குவதற்காக பசு மடம், கோவிலுக்கு பூக்கள் கொடுப்பதற்காக நந்தவனம் ஆகியவற்றை, நகரத்தார் சமூகம் நடத்தி வருகிறது.விஸ்வநாதர் கோவிலில் இருந்து 3 கி.மீ., தொலைவில் கங்கை கரையில், சிக்ரா என்ற இடத்தில், 63 ஆயிரம் சதுர அடியில் நந்தவனம் அமைக்கப்பட்டுள்ளது. 1813-ல் வாங்கப்பட்ட நிலத்தின் இப்போதைய சந்தை மதிப்பு, 240 கோடி ரூபாய்.

சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த கிருஷ்ணமோகன் முன்னா, ஆனந்த் மோகன் ஆகியோர், இந்த இடத்தை ஆக்கிரமித்து, திருமணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விட்டு
வந்தனர்.உள்ளூரில் செல்வாக்கு மிக்கவர்கள் என்பதால், அவர்களிடமிருந்து நந்தவனத்தை மீட்கும் முயற்சி வெற்றி பெறவில்லை. இதனால், ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் செலவில், பூக்களை வாங்கும் நிலை ஏற்பட்டது.


latest tamil news
இந்நிலையில், நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திர மேலாண்மை கமிட்டி தலைவர் ராமசாமி, செயலர் லட்சுமணன், பொருளாளர் சுப்பிரமணியன் ஆகியோர், இந்த நந்தவனத்தை மீட்கும் பொறுப்பை, என்னிடமும், அழகப்பன் என்பவரிடமும் ஒப்படைத்தனர். நாங்கள் இருவரும் வாரணாசி சென்று, பல்வேறு தரப்பினரை சந்தித்து, நந்தவனத்தை மீட்க முயற்சிகளை மேற்கொண்டோம். உரிய ஆவணங்களுடன், வாரணாசி மாநகர போலீஸ் கமிஷனர் சதீஷ் கணேஷிடம் புகார் அளித்தோம்.
வருவாய் துறை ஆவணங்களை சரிபார்க்க, ஒரு நாள் அவகாசம் கேட்ட அவர், 24 மணி நேரத்தில், ஆக்கிரமிப்பில் இருந்து நந்தவனத்தை மீட்டு கொடுத்தார். இதற்காக, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தோம்.

நந்தவனத்தில் உள்ள சிவன் கோவிலை சீரமைக்கும் பணியை துவங்கிஉள்ளோம். வரும் ஜூன் 16, 17-ல் கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. நந்தவனத்தில் ஜூலை 22, 23, 24 ஆகிய தேதிகளில் நடக்கும் ருத்ர ஜெப யாகத்தில் பங்கேற்பதாக, யோகி ஆதித்யநாத் உறுதி அளித்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kunar - ,
18-மே-202221:15:02 IST Report Abuse
kunar சமாஜ்வாதி ஆளுங்க முட்டாள் போன்று தெரிகிறது இங்க வந்து திராவிட கும்பல்கிட்ட வந்து எப்படி ஆட்டயை போடுவது போட்டது எப்படி காப்பாற்றி கொள்வது என்று படித்து விட்டு போங்க
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
18-மே-202220:24:03 IST Report Abuse
Vena Suna யோகி அடுத்த முதல்வர்....நெருப்புக்கு நெருப்பு..
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
18-மே-202215:37:43 IST Report Abuse
Lion Drsekar " இந்த நிலத்தை, சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் ஆக்கிரமித்திருந்தனர். " இது போன்றவர்கள் கைகளில் கட்சிகள் , அரசியல், நாடு, எங்கிருந்து உறுப்புடப்போகிறது . நாமும் நாகரீகமாக பதிவு செய்வது நல்லது என்று நினைத்தாலும் ஒவ்வொரு நாளும் வரும் செய்திகளைப்பறிக்கும்போது மனம் வேதனைப்படுகிறது, வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X