பொது செய்தி

தமிழ்நாடு

அன்னா ஹசாரே போராட்டம் வெற்றி: பொள்ளாச்சியில் கொண்டாட்டம்

Added : ஆக 29, 2011
Advertisement

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், நகர பா.ஜ., சார்பில் அன்னா ஹசாரேவின் உண்ணாவிரத போராட்டம் வெற்றி அடைந்ததை பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்."வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும்' என, வலியுறுத்தி டில்லியில் கடந்த 12 நாட்களாக காந்தியவாதி அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தார். இவருக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அமைப்புகளும், கல்லூரி மாணவர்கள், அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் பார்லிமென்டில் அன்னா ஹசாரேவின் கோரிக்கையை ஏற்று "ஜன் லோக்பால்' மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் அன்னாவின் போராட்டம் வெற்றி அடைந்துள்ளது.இதை கொண்டாடும் வகையில், பொள்ளாச்சியில் பா.ஜ., சார்பில் பட்டாசு வெடித்தும், மக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. நகர தலைவர் சிவபிரகாஷ் தலைமை வகித்தார். பொது செயலாளர் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட பொது செயலாளர் ரகுநாதன், மாவட்ட செயலாளர் ஜோதிபாபு ஆகியோர் இதில் பங்கேற்றனர். மாணவர்களின் "வெற்றி' பேரணி: அன்னா ஹசாரேவின் வெற்றியை கொண்டாடும் வகையில், கோவை தெற்கு மாவட்ட பா.ஜ., இளைஞரணி சார்பில் அனைத்து கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற பேரணி நடந்தது. மகாலிங்கபுரம் ரவுண்டானாவிலிருந்து துவங்கிய பேரணி, ஐயப்பன் கோவில் வீதி, வெங்கடேசா காலனி, நகராட்சி அலுவலகம், பாலக்காடு ரோடு, பஸ் ஸ்டாண்ட் வழியாக காந்திசிலையை அடைந்தது. அங்கு, காந்திசிலைக்கு மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடப்பட்டது. இதில், அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர். ஆனைமலை: ஹசாரேவுக்கு ஆதரவாக கொழிஞ்சாம்பாறை பஸ் ஸ்டாண்டில் நேற்றுமுன்தினம் ஊழல் ஒழிப்பு இயக்கம் சார்பாக உண்ணாவிரதம் நடந்தது. ஊழல் ஒழிப்பு இயக்கத்தின் கொழிஞ்சாம்பாறை சாயத்துறை நிர்வாகி ஆல்பர்ட் ஆனந்த்ராஜ் தலைமை வகித்தார். கேரள மாநில தமிழ் வளர்ச்சி பணி இயக்கத்தின் தலைவர் விக்டர் சார்லி முன்னிலை வகித்தார். இதில் ஊழல் ஒழிப்பு இயக்கம், தன்னார்வ அமைப்புகள், கேரள மாநில தமிழ் வளர்ச்சி பணி இயக்கம், சிறு வியாபாரிகள் சங்கம், செபாஸ்டியன் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள், தன்னார்வ அமைப்புகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X