புதுடில்லி: ராஜீவ் படுகொலை வழக்கில் தம்மை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏற்கனவே தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் பேரறிவாளன், ராஜீவ் கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ராஜீவ் படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன். இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய 2014-ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த மறைந்த ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை கூடி தீர்மானித்தது.

ஆனால் சிபிஐ விசாரித்த வழக்கு என்பதால் 7 தமிழர் விடுதலையில் தாங்களே இறுதி முடிவெடுப்போம் என்றது மத்திய அரசு இதனைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு தம்மை இந்த வழக்கில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. உச்சநீதிமன்றத்தில் இன்று காலை 10.30 மணிக்கு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE