'அம்மா மினி கிளினிக்'கை மூடியதால்ஏழை மக்கள் பாதிப்பு: பழனிசாமி

Added : மே 18, 2022 | |
Advertisement
சென்னை : 'அம்மா மினி கிளினிக் திட்டத்தை மூடியதால், போலி மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற, ஏழை சிறுமி பரிதாபமாக இறந்துள்ளார்' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை:கடலுார் மாவட்டம், வேப்பூர் தாலுகா, பூலாம்பாடி காலனியை சேர்ந்தவர் கார்த்திக். மே7ம் தேதி தன் ஐந்து வயது மகள் லட்சிதாவை, வேப்பூரில் உள்ள தாரா மெடிக்கல்ஸ் மற்றும் கிளினிக்கிற்கு



சென்னை : 'அம்மா மினி கிளினிக் திட்டத்தை மூடியதால், போலி மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற, ஏழை சிறுமி பரிதாபமாக இறந்துள்ளார்' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை:
கடலுார் மாவட்டம், வேப்பூர் தாலுகா, பூலாம்பாடி காலனியை சேர்ந்தவர் கார்த்திக். மே7ம் தேதி தன் ஐந்து வயது மகள் லட்சிதாவை, வேப்பூரில் உள்ள தாரா மெடிக்கல்ஸ் மற்றும் கிளினிக்கிற்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு டாக்டர் சத்தியசீலன் என்பவர் சிகிச்சை அளித்துள்ளார்; சிகிச்சைக்கு பின், சிறுமி இறந்து விட்டார்.இது குறித்து விசாரித்ததில், சத்தியசீலன் போலி டாக்டர் என தெரிய வந்துள்ளது.

காய்ச்சல், சளி, இருமல் போன்ற சாதாரண நோய் வந்தால், தனியார் மருத்துவர்களிடம், பணம் செலவு செய்து சிகிச்சை பெற முடியாத மக்களுக்காக, 2,000 'அம்மா மினி கிளினிக்'குகளை, அ.தி.மு.க., அரசு துவக்கியது.அதற்கு, தி.மு.க., அரசு மூடுவிழா நடத்தியது. இதனால், ஏழை மக்கள் மீண்டும், தனியார் டாக்டர்களிடம் சிகிச்சைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

பூலாம்பாடி காலனியில் வசிக்கும் கார்த்திக், கட்டணம் குறைவு என்ற காரணத்தால், போலி மருத்துவரிடம் சென்று, மகளை இழந்துள்ளார்.இல்லம் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை, அரசு அறிவித்தது. அந்த திட்டம் சரியாக செயல்படவில்லை. இதை புரிந்துள்ள அரசு, அம்மா மினி கிளினிக் திட்டத்தில் சிறிது மாற்றம் செய்து, 708 நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
நகர்ப்புறங்களில் நிறைய மருத்துவமனைகள் உள்ளன; கிராமப்புறங்களில் இல்லை. 'முந்தைய அரசின் நல்ல திட்டங்களை பரிசீலித்து தொடர வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளதை நினைவில் வைத்து, வீம்பு பிடிக்காமல், அம்மா மினி கிளினிக் திட்டத்தை முழுமையாக மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்.உயிரிழந்த லட்சிதா குடும்பத்துக்கு, 20 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.
இவ்வாறு பழனிசாமி கூறியுள்ளார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X