மதுரை : தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி ஊழல், முறைகேடுகளை விசாரிக்க தமிழக அரசு நியமித்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி டேவிதார் தலைமையிலான ஒரு நபர் கமிஷன் மதுரையில் நேற்று விசாரணையை துவக்கியது.
சென்னை, மதுரை, திருப்பூர், சேலம், திருச்சி, நெல்லை, வேலுார், தஞ்சை, கோவை, ஈரோடு, துாத்துக்குடி நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடக்கின்றன. இத்திட்ட ஊழல், முறைகேடுகள் நடந்ததா என ஆய்வு செய்ய டேவிதார் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. விசாரணை நடத்தி மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட பெரியார் பஸ் ஸ்டாண்ட், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வணிக வளாகம், விளக்குத்துாண், ஜான்சிராணி பூங்கா, பல்லடுக்கு வாகன காப்பகம், சுற்றுலா பயணிகள் மையம், தமுக்கம் கலாசார மையங்கள், மாட்டுத்தாவணி பழ மார்க்கெட், வைகை கரை ரோடு பணிகளை டேவிதார் நேற்று ஆய்வு செய்தார்.பின்னர் மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனைநடத்தினார். கமிஷனர் கார்த்திகேயன், நகர் பொறியாளர் லட்சுமணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அதிகாரிகள் கூறியதாவது: முதற்கட்டமாக ஸ்மார்ட் சிட்டி கட்டுமான பணிகளை டேவிதார் ஆய்வு செய்தார். பணிகள் குறித்து அவர் கேட்ட கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பதில் கூறியுள்ளோம், என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE