போக்குவரத்து கழக மானியம்: அரசுக்கு வல்லுனர் குழு பரிந்துரை

Added : மே 18, 2022 | |
Advertisement
சென்னை : 'கல்வி, தொழில் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருக்கும் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு மானியத் தொகை அதிகரிக்கப்பட வேண்டும்' என, அரசுக்கு வல்லுனர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.தமிழகத்தில் உள்ள எட்டு அரசு போக்குவரத்து கழகங்கள் வாயிலாக, தினமும் 19 ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றின் வாயிலாக தினமும் சராசரியாக, 1.50 கோடி பேர் பயணம் செய்து



சென்னை : 'கல்வி, தொழில் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருக்கும் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு மானியத் தொகை அதிகரிக்கப்பட வேண்டும்' என, அரசுக்கு வல்லுனர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ள எட்டு அரசு போக்குவரத்து கழகங்கள் வாயிலாக, தினமும் 19 ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றின் வாயிலாக தினமும் சராசரியாக, 1.50 கோடி பேர் பயணம் செய்து வருகின்றனர். டீசல் விலை, சுங்கச்சாவடி கட்டணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு செலவு அதிகரித்து வருகிறது. இதனால், அரசு போக்குவரத்து கழகங்கள் பல ஆயிரம் கோடி கடனில் தவிக்கின்றன.அவற்றை நஷ்டத்தில் இருந்து மீட்பது மற்றும் புதிய திட்டங்கள் வகுத்து மேம்படுத்துவது குறித்து, எட்டு பேர் அடங்கிய வல்லுனர்கள் குழு அமைக்கப்பட்டது.
இக்குழு அளித்துள்ள பரிந்துரைகள்:
நாட்டிலேயே தமிழகத்தில் தான், அதிகளவில் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பயணியர் பாதிக்காத வகையில், கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. அண்டை மாநிலங்களை ஒப்பிடுகையில், கட்டணமும் இங்கு குறைவு.பஸ் போக்குவரத்து வசதி, பொது மக்களின் அத்தியாவசியமாக இருக்கிறது. இலவச பஸ், 'பாஸ்' திட்டத்தால், கல்வி வளர்ச்சி பெறுகிறது. இதன் வழியாக, தொழில் வளர்ச்சிக்கு உதவுகிறது. இதுபோன்ற வளர்ச்சிகளால் தான் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும்.
மற்றொரு பக்கம், தனியார் வாகனங்களின் எண்ணிக்கை குறைவதோடு, சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும். எனவே, வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருக்கும் போக்குவரத்து கழகங்களை நஷ்டங்களில் இருந்து மீட்டு மேம்படுத்த, மானியத் தொகையை, தமிழக அரசு அதிகரித்து வழங்கி வேண்டும். அதேபோல, அரசு வழங்கும் மானியத்தை பெற, போக்குவரத்து கழகங்களுக்கு நிபந்தனை விதிக்க வேண்டும். இந்த தொகை, ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு குழு பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X