சென்னை : அனல் மின் உற்பத்தி குறைக்கப்பட்டதை அடுத்து, மின் வாரியத்தின் நிலக்கரி இருப்பு, 40 கோடி கிலோவை தாண்டியுள்ளது.
தமிழக மின் வாரியத்திற்கு, 4,320 மெகா வாட் திறன் உடைய, ஐந்து அனல் மின் நிலையங்களில், தினமும் முழு மின் உற்பத்திக்கு, 7.20 கோடி கிலோ நிலக்கரி தேவை. இந்த நிலக்கரி, ஒடிசாவில் உள்ள மத்திய அரசின் சுரங்கங்களில் இருந்து தினமும் அனுப்பப்படுகிறது.மின் உற்பத்தி பாதிக்கப்படாமல் இருக்க, அனல் மின் நிலையங்களில் ஏழு நாட்களுக்கு தேவையான நிலக்கரி இருப்பு வைக்க வேண்டும்.
தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், ஏப்., 29ல் மின் தேவை, 17 ஆயிரத்து, 563 மெகா வாட்டாக அதிகரித்தது. இதனால், அனல் மின் உற்பத்திக்கு அவசியம் ஏற்பட்டதால், நிலக்கரிக்கு தேவை ஏற்பட்டது.இதனால் அனல் மின் நிலையங்களில், 3,000 மெகா வாட்டிற்கு குறைவாகவே மின் உற்பத்தி செய்யப்பட்டது. தமிழக அரசின் கோரிக்கை ஏற்று, இம்மாத துவக்கத்தில் இருந்து, 5.50 கோடி கிலோவுக்கு மேல் நிலக்கரி அனுப்பப்படுகிறது.
ஒரு வாரமாக பல மாவட்டங்களில் பெய்யும் மழை காரணமாக, மின் தேவை, 14ஆயிரம் மெகா வாட்டாக குறைந்துள்ளது. தற்போது, காற்றாலைகளில் இருந்தும் அதிக மின்சாரம் கிடைக்கிறது. எனவே நிலக்கரியை மிச்சப்படுத்த, 2,000 மெகா வாட் குறைவாக, அனல் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதையடுத்து, சில மாதங்களுக்கு பின் நேற்றைய நிலவரப்படி, அனல் மின் நிலையங்களில் உள்ள நிலக்கரி இருப்பு, 40 கோடி கிலோவாக உள்ளது. இது தவிர, ஒடிசா துறைமுகத்தில் தமிழகத்திற்கு எடுத்து வர தயார் நிலையில், 20 கோடி கிலோ நிலக்கரி இருப்பு உள்ளது.மேலும், மூன்று கப்பல்களில், 20 கோடி நிலக்கரி வந்து கொண்டிருக்கிறது. இதனால், நிலக்கரி தட்டுப்பாடு பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE