எதிர்க்கட்சியினருக்கு உங்களது செல்வாக்கும், திறமையும் தெரிவதே இல்லை...

Updated : மே 18, 2022 | Added : மே 18, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு பேச்சு:ஆட்சிக்கு வந்த ஒரு ஆண்டில், 100 கோடி ரூபாய் சம்பாதித்ததாக, எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர். நான் அவ்வாறு சம்பாதிக்கவில்லை. முதலில் உங்கள் கட்சி பிரச்னையை தீர்த்து விட்டு, எங்களைப் பற்றி பேசுங்கள். எதிர்க்கட்சியினருக்கு உங்களது செல்வாக்கும், திறமையும் தெரிவதே இல்லை... எப்போதும் உங்களை, 'குறைத்தே'
பேச்சு_பேட்டி_அறிக்கை, திமுக, நேரு

நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு பேச்சு:
ஆட்சிக்கு வந்த ஒரு ஆண்டில், 100 கோடி ரூபாய் சம்பாதித்ததாக, எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர். நான் அவ்வாறு சம்பாதிக்கவில்லை. முதலில் உங்கள் கட்சி பிரச்னையை தீர்த்து விட்டு, எங்களைப் பற்றி பேசுங்கள்.


எதிர்க்கட்சியினருக்கு உங்களது செல்வாக்கும், திறமையும் தெரிவதே இல்லை... எப்போதும் உங்களை, 'குறைத்தே' மதிப்பிடுறாங்க... 'அவங்களுக்கு தெரிஞ்சது அவ்வளவு தான்'னு விட்டுத் தள்ளுங்க!

பா.ம.க., தலைவர் ஜி.கே. மணி பேட்டி:
காவலர், செவிலியர், தையல் கலைஞர்கள் கூட பயிற்சி எடுக்காமல் வேலை செய்ய முடியாது. அந்த அடிப்படையில் அரசாங்கத்தை உருவாக்குகிற அரசியல் கட்சிக்கு பயிற்சி அளிக்கும் நோக்கத்தில், பா.ம.க., பயிலரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பயிலரங்கம் வாயிலாக, ஒரு லட்சத்து 754 பேர் பயிற்சி பெற்றனர். இதில், பெண்கள் மட்டும் 25 ஆயிரத்திற்கு மேல் பயிற்சி பெற்றுள்ளனர்.


நிழல் பட்ஜெட் போடுறீங்க... பயிலரங்கம் நடத்துறீங்க... ஆனா, 'ரிசல்ட்' தான் எதுவும் சொல்லிக்கிற மாதிரி இல்லை!


latest tamil news


மா.கம்யூ., மாநில செயலர் பாலகிருஷ்ணன் பேட்டி:
தி.மு.க., அரசு என்றைக்கும், பா.ஜ.,வுடன் ஒத்துப்போகாது. ஆனால், அ.தி.மு.க., தான், பா.ஜ.,விற்கு கையாளாக உள்ளது. பா.ஜ.,வை துாக்கிப் பிடிக்க, துாக்கிப் பிடிக்க தமிழக அரசியலில் அ.தி.மு.க.,விற்கு களம் இருக்காது.


உங்க கட்சியும் ஒரு காலத்துல செல்வாக்கா இருந்துச்சு... திராவிட கட்சிகள் முதுகுல சவாரி செஞ்சு, செஞ்சு இன்னைக்கு சொந்தமா கால் இருக்கா, இல்லையான்னே தெரியாம துவண்டு போய் கிடக்கிறதே!

தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., திருச்சி சிவா பேச்சு:
சட்டசபை தேர்தலில் அமைத்தது போல், அடுத்த லோக்சபா தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம். மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து, மாநிலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறோம். அதே நேரம், மாநில உரிமைகளைக் காக்க, உரிய வகையில் குரல் எழுப்புகிறோம்.


போன ஆட்சியில, இதே கருத்தை அ.தி.மு.க.,வினர் சொன்னப்ப, 'மத்திய அரசின் எடுபிடி' என உங்க தலைவர் விமர்சனம் செய்தது தான் இப்ப நினைவுக்கு வருது!

தமிழ்நாடு ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் அழகரசன் பேட்டி:
நாட்டின் பருத்தி பயிரிடும் பரப்பு குறைந்து, விளைச்சல் சரிந்துள்ளது. குஜராத்தில், ஆண்டுக்கு 85 லட்சம் பேல் - ஒரு பேல் 170 கிலோ - பருத்தி உற்பத்தியாகிறது. தமிழகத்தில் வெறும் 2.96 லட்சம் பேல் மட்டுமே விளைகிறது. தமிழகத்தில் பருத்தி விளைச்சலை அதிகரிக்க, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


நெல், கரும்பு விளைச்சல்களுக்கு இலக்கு நிர்ணயிக்கிற மாநில அரசு, பருத்தி விளைச்சலை மட்டும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகுவது ஏனோ?


Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
18-மே-202218:03:55 IST Report Abuse
sankaseshan K. N . நேருவுக்கு 100 கோடி ஜுஜுபி திருச்சியை வளைத்து போட்ட கில்லாடி உண்டியல் குலுக்கிகள் அட்ரஸ் இல்லாமல் போய்விட்டனர் நிற்பது திருடர்கள் கொடுத்த வாடகை கால்களில்
Rate this:
Cancel
sethusubramaniam - chennai,இந்தியா
18-மே-202213:45:40 IST Report Abuse
sethusubramaniam கம்யூனிஸ்டுகளை இனி குறை சொல்லாதீர்கள் ஆனந்தகி கண்ணன் ஐயா. தற்பொழுது திமுகவினர் அவர்களை விட பலபடி முன்னேறி சம்பாதிக்கின்றனர். இனி தமிழகத்தில் செங்கொடியால் நிறுவனங்கள் மூடப்படாது. சிவப்பு -கருப்பு கொடியால் மட்டுமே.
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
18-மே-202212:41:19 IST Report Abuse
கல்யாணராமன் சு. \\இந்த பயிலரங்கம் வாயிலாக, ஒரு லட்சத்து 754 பேர் பயிற்சி பெற்றனர். இதில், பெண்கள் மட்டும் 25 ஆயிரத்திற்கு மேல் பயிற்சி பெற்றுள்ளனர்.\\ ... பயிலரங்கம் வாயிலாக, பங்கு பெற்றோர், என்னென்ன கற்றுக்கொண்டார்கள் என்பதையும் இவர் விவரித்தால், நன்றாக இருக்கும்...... இல்லையெனில் வெறும் மரம் வெட்டவும், ரயில் மீது கல்லடிக்கவும் மட்டும் கற்றுக்கொடுத்தார்கள் என்று தவறாக புரிந்துகொள்ள வாய்ப்புகள் அதிகம் ........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X