திருப்பூர் : ஜவுளித்தொழிலில் அசாதாரண சூழல் நிலவுவதால், சிறப்பு கடனுதவி வழங்க வேண்டும் என திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், மத்திய அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
வரலாறு காணாத வகையில், பஞ்சு விலை உயர்ந்துள்ளதால், நுால் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால், ஒட்டுமொத்த பனியன் தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. டில்லியில் நேற்று திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து, தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விளக்கினர்.
இதுகுறித்து ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் கூறியதாவது:
சிறு, குறு மற்றும் நடுத்தர பனியன் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மீண்டும் தொழிலை துவங்க, சிறப்பு கடன் திட்டத்தை மத்திய அரசு அறிவித்து, உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். உள்நாட்டு ஜவுளி உற்பத்திக்கு தேவையான நுால் தடையின்றி கிடைக்க, நுாற்பாலைகள் நுால் ஏற்றுமதியை குறைத்து கொள்ள வேண்டும். இல்லாதபட்சத்தில், நுால் ஏற்றுமதிக்கும் தடை விதிக்க நேரிடுமென மத்திய அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.
இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE