ராஜிவ் கொலை வழக்கு: பேரறிவாளனை விடுதலை செய்தது உச்சநீதிமன்றம்

Updated : மே 18, 2022 | Added : மே 18, 2022 | கருத்துகள் (244+ 19) | |
Advertisement
புதுடில்லி: ராஜிவ் படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளனை சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி உச்சநீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன். இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய 2014ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த
Perarivalan, Release, SupremeCourt, SC, Rajiv Verdict, பேரறிவாளன், விடுதலை, சுப்ரீம் கோர்ட், உச்சநீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: ராஜிவ் படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளனை சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி உச்சநீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன். இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய 2014ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த மறைந்த ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை கூடி தீர்மானித்தது. ஆனால் சிபிஐ விசாரித்த வழக்கு என்பதால் 7 தமிழர் விடுதலையில் தாங்களே இறுதி முடிவெடுப்போம் என்றது மத்திய அரசு.


latest tamil newsஇதனைத் தொடர்ந்து 2016ம் ஆண்டு தம்மை இந்த வழக்கில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா அமர்வு இன்று (மே 18) தீர்ப்பு வழங்கியது. அதில், கவர்னர் முடிவு எடுக்காமல் தாமதப்படுத்தியது தவறு எனக் கருத்து தெரிவித்ததோடு, சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டது.


பேரறிவாளன் வழக்கு - கடந்து வந்த பாதை1991 ஜூன் 11: பேரறிவாளன் கைது

1998 ஜன.,28: ராஜிவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 26 பேருக்கும் தூக்கு தண்டனை உறுதி

1999 மே 11: மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் சாந்தன், பேரறிவாளன், முருகன், நளினி ஆகியோருக்கு தூக்கு தண்டனை உறுதி செய்தது. மற்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

1999 அக்டோபர் 8: தூக்கு தண்டனையை மறு ஆய்வு செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

1999, அக்டோபர் 17: தமிழக கவர்னருக்கு பேரறிவாளன் கருணை மனு அனுப்பி வைத்தார்

2000, ஏப்ரல் 25: பேரறிவாளனின் கருணை மனுவை நிராகரித்த கவர்னர், நளினியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தார்

2000, ஏப்ரல் 26: ஜனாதிபதிக்கு பேரறிவாளன் கருணை மனு அனுப்பி வைத்தார்

2011, ஆகஸ்ட் 26: பேரறிவாளனின் கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்தார்.

2016: கருணை மனுவை ஜனாதிபதி தாமதமாக நிராகரித்ததாக உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு

2022 மே 18: பேரறிவாளனை விடுவித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு


தலைவர்கள் கருத்து

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தலைவர்கள் தெரிவித்த கருத்துகள்.


முதல்வர் ஸ்டாலின் பேட்டி:

32 ஆண்டுகாலமாக சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலை செய்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்றில் இடம்பெறக்கூடிய தீர்ப்பு. தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர் அளித்த வாதங்களை முழுமையாக ஏற்றுக்கொண்டு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் மாநிலத்தின் உரிமை, இந்த தீர்ப்பு மூலம் நிலைநாட்டப்பட்டுள்ளது.மாநில அரசின் கொள்கையில், அதன் முடிவில், கவர்னர் தலையிட அதிகாரம் இல்லை என நீதிபதிகள் கூறியுள்ளார். இது முக்கியமான ஒன்று. கவர்னர் செயல்படாத நேரத்தில் நீதிமன்றம் செயல்படும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். மாநில அரசின் அரசியல் கொள்கை முடிவில் தாண்டி கவர்னர் தலையிட அதிகாரம் இல்லை என்பது உறுதியாகி உள்ளது. இந்த தீர்ப்பு மாநிலத்தின் சுயாட்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. பேரறிவாளனுக்கும், அவரது தாயாருக்கும் வாழ்த்துகள். மாநில உரிமைகளும் நிலை நாட்டப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நீதிமன்றத்தின் தீர்ப்பு முழுமையாக வந்த பிறகு, 7 பேரின் விடுதலை தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் பேசி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.


அதிமுக

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பேரறிவாளன் விடுதலை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் துணிச்சலுக்கும் தொலைநோக்கு சிந்தனைக்கும் சட்ட ஞானத்துக்கும் கிடைத்தமகத்தான வெற்றி. ஜெயலலிதா சட்ட போராட்டத்தை தளராது முன்னெடுத்து, அப்போதைய அரசு மேற்கண்ட அயராத முயற்சிகளின் நிறைவாக பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதுலை செய்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை


பேரறிவாளனை உச்சநீதிமன்றம், அரசியல் அமைப்பு சட்டம் 142ன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்திருக்கும் தீர்ப்பை தமிழக பா.ஜ., ஏற்று கொள்கிறது. நம் ஒற்றுமையும், பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் சமரசம் செய்வதற்கு உச்சநீதிமன்றம் அனுமதிக்காது என்றும் நம்புகின்றோம்.


தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி


முன்னாள் பிரதமர் ராஜிவை கொன்ற கொலையாளிகள் 7 பேரை உச்சநீதிமன்றம் தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்தது. அதே உச்சநீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களை சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில் குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிராபரதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாக கூற விரும்புகிறோம்.


ம.தி.மு.க., பொது செயலர் வைகோ


பேரறிவாளன் விடுதலை எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது. எந்த தவறும் செய்யாமல், இந்த இளைஞருடைய இளமைக்கால வாழ்க்கை சீர்குலைக்கப்பட்டுவிட்டது. பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நீதியை நிலைநாட்டியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.


முதல்வருடன் சந்திப்பு

உச்சநீதிமன்றம் தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து, அற்புதம்மாளை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார்.பின்னர், மாலையில், சென்னை சென்ற அற்புதம்மாள் மற்றும் பேரறிவாளன், ஸ்டாலினை சந்தித்து பேசினர். அப்போது, இருவரும் நன்றி தெரிவித்து கொண்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (244+ 19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Pitchiah - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
19-மே-202212:50:31 IST Report Abuse
Natarajan Pitchiah இவர் ஜெயிலில் வசதியாக இருந்திருப்பர் போல .வ உ சி வெளியே வரும்போது உள்ள படம் பார்த்திருக்கிறீர்களா
Rate this:
Cancel
Manguni - bangalore,இந்தியா
19-மே-202210:45:05 IST Report Abuse
Manguni இவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும். திமுக இணை செயலாளர் பதவி கொடுத்து அழகு படுத்துங்கள். கேடு கேட்ட நாடு இது.
Rate this:
Cancel
ganesha - tamilnadu,இந்தியா
19-மே-202207:55:04 IST Report Abuse
ganesha என்னதான் இருந்தாலும், என்னதான் இவர்கள் பேசினாலும், இவன் குற்றவாளி என்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் கோர்ட் தீர்ப்பளித்தவுள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X