வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லக்னோ: வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் உயர்வு போன்ற பிரச்னைகளை திசைத்திருப்ப பா.ஜ., மத உணர்வுகளை தூண்டி வருவதாக உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக மாயாவதி கூறியதாவது: வேலையில்லாத் திண்டாட்டம், உயர்ந்து வரும் பணவீக்கம் போன்ற பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் பா.ஜ., மத உணர்வுகளைத் தூண்டி வருகிறது. இதற்காக மத வழிபாட்டுதலங்கள் பா.ஜ.,வினரால் வேண்டுமென்றே குறிவைக்கப்படுகிறது. எனவே இங்கு எப்போது வேண்டுமானாலும் நிலைமை மோசமாகலாம். இந்த சதி குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் ஆன நிலையில், ஞானவாபி, மதுரா, தாஜ்மஹால் போன்ற இடங்களைச் சாக்காக வைத்து மக்களின் மத உணர்வுகளை சதித்திட்டத்தின் மூலம் தூண்டும் விதம் நாட்டை வலுப்படுத்தாது என்பதை பா.ஜ., கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட மதத்தினருக்கு சொந்தமான இடங்களின் பெயர்களும் ஒவ்வொன்றாக மாற்றப்படுகின்றன. இது நாட்டின் அமைதி, நல்லிணக்கம், சகோதரத்துவத்தை சீர்குலைத்து, வெறுப்பை அதிகரிக்கும். இது மிகவும் கவலையளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE