ரூ.7 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஒன்றிய பொறியாளர் கைது

Added : மே 18, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
தேவகோட்டை: கண்ணங்குடி ஒன்றியத்தில் உள்ள சுண்டமங்கலம் தேரளப்பூர் ரூ.13 லட்சம் மதிப்பில் சாலை திட்ட மதிப்பீடு தயாரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சம்பந்தப்பட்ட பகுதி ஊராட்சி தலைவர் சுப்பிரமணியனிடம் ஒன்றியத்தில் பொறியியல் பிரிவில் துணை பொறியாளராக பணியாற்றும் திருமாறன் இப்பணி செய்ய ரூ.7 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். ஊராட்சி தலைவர் சுப்பிரமணியன் சிவகங்கை லஞ்ச
ரூ.7 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஒன்றிய பொறியாளர் கைது

தேவகோட்டை: கண்ணங்குடி ஒன்றியத்தில் உள்ள சுண்டமங்கலம் தேரளப்பூர் ரூ.13 லட்சம் மதிப்பில் சாலை திட்ட மதிப்பீடு தயாரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சம்பந்தப்பட்ட பகுதி ஊராட்சி தலைவர் சுப்பிரமணியனிடம் ஒன்றியத்தில் பொறியியல் பிரிவில் துணை பொறியாளராக பணியாற்றும் திருமாறன் இப்பணி செய்ய ரூ.7 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். ஊராட்சி தலைவர் சுப்பிரமணியன் சிவகங்கை லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து ரசாயனம் தடவிய ரூபாயை சம்பந்தப்பட்ட அதிகாரி திருமாறனிடம் கொடுத்தார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி ராமச்சந்திரன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்சம் பெற்ற போது கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
18-மே-202219:53:56 IST Report Abuse
raja 5000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது .... இங்கே பொறியாளர் 7000க்கு கைது ... சூப்பர் விடியல் தமிழகத்துக்கு இந்த வீடியா மூஞ்சிகள் ஆட்சியில்..........
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
18-மே-202218:45:15 IST Report Abuse
M S RAGHUNATHAN போக்குவரத்து துறைகளில் பிடிபட்ட லட்சக்கணக்கான லஞ்சப் பணத்திற்கு இதுவரை யாரும் கைது.செய்யப்.படவில்லை. ஆகவே இனி விடியல்.ஆட்சியில். அதிகாரிகள் லஞ்சம் வாங்கினால்.லட்சக்கணக்கில் இருக்க வேண்டும். பணி மாற்றம்.மேலும் படை உள்ள துறைக்கு கிடைக்கும்
Rate this:
Cancel
Sivaswamy Somasundaram - Coimbatore ,இந்தியா
18-மே-202217:46:14 IST Report Abuse
Sivaswamy Somasundaram தெளிவாச் சொல்லுங்கய்யா. ஒன்றியம்னா டெல்லியா லோகலா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X