பேரறிவாளன் விடுதலை: நாளை காங்., போராட்டம்

Added : மே 18, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
சென்னை: ராஜிவ் கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை காங்கிரஸ் சார்பில் அறப்போராட்டம் நடக்கும் என அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். காலை 10 மணி முதல் 11 மணி வரை வெள்ளைத்துணியை கட்டிக்கொண்டு போராட்டம் நடக்கும் எனக்கூறியுள்ளார். முன்னதாக அழகிரி வெளியிட்ட அறிக்கையில், முன்னாள் பிரதமர் ராஜிவை கொன்ற
பேரறிவாளன் விடுதலை: நாளை காங்., போராட்டம்

சென்னை: ராஜிவ் கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை காங்கிரஸ் சார்பில் அறப்போராட்டம் நடக்கும் என அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். காலை 10 மணி முதல் 11 மணி வரை வெள்ளைத்துணியை கட்டிக்கொண்டு போராட்டம் நடக்கும் எனக்கூறியுள்ளார்.

முன்னதாக அழகிரி வெளியிட்ட அறிக்கையில், முன்னாள் பிரதமர் ராஜிவை கொன்ற கொலையாளிகள் 7 பேரை உச்சநீதிமன்றம் தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்தது. அதே உச்சநீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களை சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில் குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிராபரதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாக கூற விரும்புகிறோம் எனக்கூறியிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
18-மே-202221:16:56 IST Report Abuse
Mohan ....
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
18-மே-202220:30:24 IST Report Abuse
GMM பேரறிவாளன் விடுதலை எதிர்த்து தமிழக காங்கிரஸ் அற போராட்டம். அழகிரியின் ஆறுதல் தரும் அறிவிப்பு. இந்திய தேசிய காங்கிரஸ் நிலைப்பாடு என்ன? ராகுல், பிரியங்கா, சோனியா மவுனம் ஏன்? பிஜேபி கூட மௌனம். திராவிடம் உற்சாகம். நீதிமன்றம் வக்கீல் வாதம் கொண்டு கவர்னர், ஜனாதிபதி மற்றும் உயர் நிர்வாக அமைப்புகளை விமர்சனம் செய்வது நீதிமன்றம் மீதான மதிப்பு குறைந்து விடும். கால எல்லை இல்லை. கவர்னர் காலதாமதம் செய்தார் என்று எப்படி கூற முடியும்? சிறப்பு அதிகாரம் கொண்டு நீதிமன்றம் ஒரு பிரச்சினைக்கு இரு மாறுபட்ட தீர்ப்பு வழங்க முடியுமா? அரசு தணிக்கை முறை, NJAC, நீதிபதி அதிகார வரம்பை முடிவு செய்ய வேண்டிய கட்டாயம். சர்வதேச அளவில் நாட்டின் நீதி மன்ற தீர்ப்பு விமர்சனங்களை சந்திக்கும் போது, நாடு உலக மதிப்பை இழக்கும். காங்கிரசில் அழகிரி பிஜேபியில் யோகிக்கு முக்கிய பதவி தருக.
Rate this:
Cancel
Raj - Chennai,இந்தியா
18-மே-202220:21:02 IST Report Abuse
Raj தைரியமாக சொன்னதுக்கு வாழ்த்துகள். உடனே பேரரிவாளனுக்கு வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின் கட்சியோடு உறவை முறித்து கொள்ளவும்.. அப்போது தான் உங்கள் போராட்டம் உண்மையானது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X