இது உங்கள் இடம்: வசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை!| Dinamalar

இது உங்கள் இடம்: வசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை!

Updated : மே 18, 2022 | Added : மே 18, 2022 | கருத்துகள் (6) | |
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு அனுப்பிய கடிதம்:ப.சுபஸ்ரீ, மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, மே 13ல் காணொலி காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடத்தியுள்ளார். அதில், தென் மாவட்டங்களைச் சேர்ந்த நகராட்சி கமிஷனர்கள் பங்கேற்றுள்ளனர். அப்போது, சிவகங்கை நகராட்சி கமிஷனர், ஒரு
பொன்னையா, முட்டாள், மூதேவி, சிவகங்கை, நகராட்சி கமிஷனர்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு அனுப்பிய கடிதம்:
ப.சுபஸ்ரீ, மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:


நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, மே 13ல் காணொலி காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடத்தியுள்ளார். அதில், தென் மாவட்டங்களைச் சேர்ந்த நகராட்சி கமிஷனர்கள் பங்கேற்றுள்ளனர். அப்போது, சிவகங்கை நகராட்சி கமிஷனர், ஒரு கேள்விக்கு சரியாக பதில் தராததால், அவரை, 'முட்டாள், மூதேவி' என்று பொன்னையா திட்டியுள்ளார்.

அத்துடன், 'மற்ற நகராட்சி கமிஷனர்கள் முன்னிலையில், இப்படி திட்டாதீர்கள்' என எதிர்ப்பு தெரிவித்த அந்த கமிஷனரை, 'சஸ்பெண்ட்'டும் செய்துள்ளார். இப்போதெல்லாம், பெற்ற பிள்ளைகளை கூட வாய்க்கு வந்தபடி திட்ட முடியாது. அப்படிப்பட்ட நிலையில், தனக்கு கீழே வேலை பார்க்கும் ஒரு அதிகாரியை, 'முட்டாள், மூதேவி' என்று நாட்டுப்புற ஸ்டைலில் பொன்னையா திட்டியிருப்பது சகிக்கவில்லை.


latest tamil news


முதல்வன் திரைப்படத்தில், தன் இடுப்பை யார் தொட்டு விட்டாலும், உடனே நடிகர் வடிவேலு அவரை வாய்க்கு வந்தபடி திட்டுவார். அவருக்கு அப்படி ஒரு வியாதி. அந்த மாதிரியான வியாதி, மேலே குறிப்பிட்ட நபருக்கும் இருக்குமோ? அமைச்சரோ, அதிகாரியோ யாராக இருந்தாலும், மிகவும் கண்ணியத்துடன் நடந்து கொண்ட காலம் மலை ஏறி, 50 ஆண்டுகளாச்சு. தவறுகளை சுட்டிக் காட்டுவதை, நாசுக்காக செய்த தலைவர்கள் எல்லாம் மறைந்து விட்டனர்.

பொதுவாக தவறு செய்த பணியாளர்களை, நாலு பேர் முன்னிலையில் திட்டி அவமானப்படுத்தக் கூடாது என்பது தொழில் தர்மம். ஆனால், உயர் பதவியில் இருப்பவரை, அதிகார போதையில் பகிரங்கமாக கேவலப்படுத்துவது, இந்த ஆட்சியில் ஒன்றும் புதிதில்லை. தற்போதைய முதல்வரின் வாரிசும், அமைச்சராக பதவி வகிக்கும் ஒருவரும், ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே, காவல் துறைக்கு விட்ட அதிரடி மிரட்டல்களை, சவால்களை மக்கள் மறக்கவில்லை.

'முட்டாள், மூதேவி, சனியனே, பீடை' என்று கிராமப்புற கிழவி ரேஞ்சுக்கு பொறுப்புள்ள அதிகாரி திட்டுவது துரதிருஷ்டவசமானது. 'நான் ஒரு முட்டாளுங்க...' என, சந்திரபாபு மாதிரி பாடிக் கொண்டு போக, இது 'ரீல்' இல்லை...ரியல். இவர்களின் செயலை பார்த்து, 'வசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை' எனக்கூறி, புலம்புவதை தவிர வேறு வழியில்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X